ஞாயிறு, 5 மே, 2024

all to day

 






மனிதநேயம் சிறக்கட்டும்.

 

மனிதநேயம் சிறக்கட்டும்.

 

 

அனைவருக்கும் வணக்கம்;

 

 

சமீபத்திய நாட்களில் நம் நகரத்தில் வீடுகளின் வெளிப்புற சுவர் மற்றும் காம்பவுண்டு சுவர்களில் நமக்கு சம்பந்தமில்லாத கூட்டல் குறியீடு, பெருக்கல் குறியீடு, பொட்டு வடிவிலான  குறியீடு வர்ணங்களில் குறிப்பிட்டு இருந்தால்  தங்களுக்கு மட்டும் இது போன்று உள்ளதா அல்லது தங்களது அண்டை அயலார் வீடுகளிலும் இதுபோன்ற குறியீடுகள் உள்ளனவா என வா என விசாரித்து  இது போன்ற குறியீடுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டில் தொடர்ச்சியாகவோ அல்லது விட்டு விட்டு இருந்தாலோ சற்றும் யோசிக்காமல்,  காலதாமதம் செய்யாமல் தங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இது போன்ற செயல்களை உடனடியாக தெரியப்படுத்துமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

இந்த குறியீடுகளின் பின்னணியில் முகம் தெரியாத சில விஷம நபர்கள் கண்டிப்பாக இருக்கக்கூடும். குறியீடு    இடுபவர்கள் பெரும்பான்மையாக வயோதிகர்கள், கர்ப்பிணி பெண்கள் வேடம் அணிந்தவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியவர்கலாக இருக்கக்கூடும். தொன்று தொட்டு பொதுவாக தமிழர்களின் மனதில் வயோதிகர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கருணை எற்படுமே தவிர சந்தேகம் ஏற்படாது என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் இந்த குறியீடுகளை நம் வீடுகளில் குறியீடலாம். இந்த குறியீடுகளினால் இட்டவர்களுக்கு என்ன லாபம் நஷ்டம் என ஆராய்வதை விட. நாம் அதிக கவனம் மற்றும் பாதுகாப்புடன் இருப்பது மிகவும் அவசியம்.

 

மனிதநேயம் சிறக்கட்டும்இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. முதலில் நாம் நமது பாதுகாப்பை உறுதி செய்யலாமே அன்றும் சரி இன்றும் சரி என்றும் சரி,

காவல்துறை உங்கள் நண்பன்

என்ற பொன்மொழிக்கேற்ப நாம் இதுபோன்ற செயல்களை காவல்துறையினரிடம் தெரிவிப்பதன் மூலம் நமக்கு மட்டுமல்ல நம் சுற்றியுள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்க உதவும். நன்றி.

 

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்னும் அறவழியில் என்றென்றும் மக்கள் சேவையில்,

ஓம் சக்தி ஐய்யப்பா CONSTRUCTION, Union Office அருகில் கறம்பக்குடி, 622302.

Er.சூரியபிரகாஷ்இராஜப்பா பிள்ளை.,B.Tech.,M.B.A.,வரைபடம் சமர்ப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர்

Cell # +91 944 31 55 107, +91 90 95 24 95 81. /என்றென்றும் நம் நினைவில் வாழும்.S.இராஜப்பா பிள்ளை. ஓம் சக்தி டைபிஸ்ட்.

e Mail – suryarajappa@gmail.com/ suryarajappa.blogspot.com / twitter - suryarajappa1 / Instagram& threads-surya.rajappa