திங்கள், 28 நவம்பர், 2011

விழியே பேசு...: குறைந்தபட்ச மின் கட்டணம் வீடுகளுக்கு ரூ.40 லிருந்த...

விழியே பேசு...: குறைந்தபட்ச மின் கட்டணம் வீடுகளுக்கு ரூ.40 லிருந்த...: தமிழகத்தில் வீடுகள் , தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் , குறைந்த பட்ச மின் கட்டணமும் , இரு மடங்காக உயர உள்ளது. மின்சார ஒழுங்...

வேடந்தாங்கல்: பெட்ரோல் விலை!? மறைக்கப்படும் மர்மங்கள்...

வேடந்தாங்கல்: பெட்ரோல் விலை!? மறைக்கப்படும் மர்மங்கள்...: பெட்ரோல், இன்று இந்தியாவில் அடிக்கடி விலை ஏறும் ஒரு பொருள். எப்போது உயரும் என்று யாராலும் சொல்ல முடியாது. இன்று உலகளவில்     கச்சா எண்ணெய்ய...

செவ்வாய், 22 நவம்பர், 2011

அட்ரா சக்க: சைக்கோ கணவனை கொலை செய்த ஒரு தேவதையின் டைரியிலிருந்...

அட்ரா சக்க: சைக்கோ கணவனை கொலை செய்த ஒரு தேவதையின் டைரியிலிருந்...: 1993 செப்டம்பர் 16: இன்று 16 பிறந்த நாள். ஸ்கூல் விட்டு சீக்கிரம் வந்துடு. ஈவினிங்க் மலைக்கோவிலுக்கு போலாம்னு அம்மா சொன்னாங்க. சரின்னு ந...

தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் - அழகு குறிப்பு - மூன்றாம் கோணம்

தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் - அழகு குறிப்பு - மூன்றாம் கோணம்

மின்சாரமே எங்கே ஒளிந்திருக்கிறாய்? | ! தமிழ்வாசி !

மின்சாரமே எங்கே ஒளிந்திருக்கிறாய்? | ! தமிழ்வாசி !

விமானம் பறப்பது எப்படி? | ! தமிழ்வாசி !

விமானம் பறப்பது எப்படி? | ! தமிழ்வாசி !

ஞாயிறு, 20 நவம்பர், 2011

தமிழ்த்தொட்டில்: அரசாங்கம் நடத்தும் சீட்டு கம்பெனியில் ஏமாந்தவர்களி...

தமிழ்த்தொட்டில்: அரசாங்கம் நடத்தும் சீட்டு கம்பெனியில் ஏமாந்தவர்களி...: இதோ மேலுள்ள படங்களில் நம் அரசாங்கத்தின் முட்டாள்தனத்தைப் பார்க்கலாம். கீழே படிக்க என் முட்டாள் தனத்தைப் பார்க்கலாம். தமிழக அரசு ப...

சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.}




1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 

ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!

போட்டோகிராபர் கணேசன்: ஆடு கொடுத்தாக, மாடு கொடுத்தாக…. சமயம் பார்த்து அல்...

போட்டோகிராபர் கணேசன்: ஆடு கொடுத்தாக, மாடு கொடுத்தாக…. சமயம் பார்த்து அல்...: ஆடு கொடுத்தாக, மாடு கொடுத்தாக…. சமயம் பார்த்து அல்வாவும் கொடுத்திட்டாகளே! அம்மா ஆடு கொடுத்தாக, மாடு கொடுத்தாக என்று கிராமத்து மக்கள் பூரி...

இந்த உலகம் எங்கே செல்கிறது??????????: government bus la ticket எடுப்பவன் கேனையன்...... ப...

இந்த உலகம் எங்கே செல்கிறது??????????: government bus la ticket எடுப்பவன் கேனையன்...... ப...: என்ன பாஸ் நம்ப முடியலையா ??? என்னக்கும் first அப்படி தான் இருந்துச்சு...... பஸ்சில் பயண கட்டணம் எத்தின உடன்.... பஸ் இல் இருபவர்கள் புலம்பிய...

'சுரன்': சில முரண்கள்.....

'சுரன்': சில முரண்கள்.....: ரேஷன் கடைகளைவிட இங்கே மதுக் கடைகள்தான் அதிகம் என்று பத்திரிக்கை நிரூபர்களுக்கு இயக்குனர் அமீர் ஆவேசத்துடன் பேட்டியளித்தார். தமிழக தேர்தல் ...

'சுரன்': மக்களை எரிக்கும் பெட்ரோல் ?

'சுரன்': மக்களை எரிக்கும் பெட்ரோல் ?: பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் ...

மக்களை எரிக்கும் பெட்ரோல் ?



பெட்ரோல் விலை நிர்ணயம்  மறைக்கப்படும் மர்மங்கள்
                                                                                             -எம்.கண்ணன்
பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட் களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி யென்றால் உலக மார்க் கெட்டில் கச்சா எண்ணெய்யின் விலை எப் போதும் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந் திருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் இல்லை.

2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண் ணெய்யின் விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 54 ஆகத்தான் இருந்தது. தற்போது (5.11.11) ஒரு பீப்பாயின் விலை 108 டாலர். அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண் ணெய் ரூ.33.28 தான். ஆனால் நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 72.68 பைசா. ஏன் இந்த மலைக்கும் மடுவுக்கு மான வித்தியாசம்?
                               

 விலை நிர்ணயம் செய்வது யார்-எப்படி?

பெட்ரோலை உற்பத்தி செய்ய 90 சத விகிதம் கச்சா எண்ணெய்யும், 10 சதவிகிதம் உள்நாட்டில் தயாராகும் பொருட்களும் பயன் படுத்தப்படுகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்திக்கு, கச்சா எண்ணெய்க்கும் சேர்த்து ஆகும் செலவு 2008- 09 ம் ஆண்டு புள்ளி விபரப்படி ரூ 26.11 ஆகும். 2009- 10ம் ஆண்டு ரூ. 21.75 என்று அரசின் புள்ளி விபரங்களே உறுதிப்படுத்துகிறது. ஆனால் மத்தியஅரசுஎப் படியெல்லாம் வரியை கூட்ட முடியுமோ அப் படி கூட்டி, பெட்ரோலின் விலையை உயர்த்து கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் அடங் கியுள்ள வரியினங்கள் வருமாறு (24.8.2011)

ஆதார விலை - ரூ. 24.23

சுங்கத்தீர்வை - ரூ. 14.35

கல்விவரி - ரூ. 0.43

விற்பனையாளர் கமிஷன் - ரூ. 1.05

சுத்திகரிப்பு செலவு - ரூ 0.52

சுத்திகரிப்பு விலையின்

மூலதனச்செலவு - ரூ. 6.00

மதிப்புக்கூட்டு வரி - ரூ. 5. 50

கச்சா எண்ணெய் சுங்கவரி- ரூ. 1.10

பெட்ரோல் சுங்கவரி - ரூ. 1. 54

சரக்கு போக்குவரத்து செலவு- ரூ. 6.00

மொத்தம் - ரூ. 60.72 


இப்படித்தான் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல் பெட்ரோல் விலையில் பாதிக் கும் மேல் வரி இனங்களாக வசூலிக்கப்படு கின்றன. இது தவிர எண்ணெய் நிறுவனங் களின் கொள்ளை லாப கணக்கே... தனி.

அரசுக்கு நஷ்டமா?

பெட்ரோலியத்துறை அமைச்சகம் நாடா ளுமன்ற நிலைக்குழுவுக்கு கொடுத்துள்ள அறிக்கையின்படி 2004 - 05ம் ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருமானம் 77 ஆயிரத்து 692 கோடி ரூபாய், சுங்கவரி மூலம் ரூ. 15 ஆயிரம் 483 கோடி ஆகும். மாநில அரசு களுக்கு கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய்.

இதே போல் 2006- 07 முதல் 2009 -10ம் நிதியாண்டு வரை பெட்ரோலியப் பொருட் களின் வரி முலம் மத்திய அரசுக்கு கிடைத் திருக்கும் வருவாய் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ஆகும். மாநில அரசுகளுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.2லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடி. ஆனால் இதே காலத் தில் பெட்ரோலிய பொருட்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ. 23 ஆயி ரத்து 325 கோடி மட்டுமே. ஆக பெட்ரோலிய பொருட்களின் மூலம் மத்திய-மாநில அரசு களுக்கு கிடைக்கும் லாபத்தில் இருந்து வெறும் 3.45 சதவிகிதம் தான் மானி யமாக வழங்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அரசுக்கு வருவாயே தவிர எவ்வித நஷ்டமும் இல்லை என்பதுதான் உண்மை.
                                   

உண்மையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டமா?

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என வாய் வலிக்காமல் கூறிவருகின்றனர். அப்படி என்னதான் நஷ்டம் அடைகின்றன. அதன் விபரத்தை கீழ்க்காணும் பட்டியலில் பார்த் தாலே மன்மோகன், மாண்டேக்சிங் அலுவா லியா வகையறாவின் வருத்தம் புரியும்.

2008ம் ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.6962.58 கோடி, 2009 ல் ரூ. 2,949.55 கோடி, 2010 ல் ரூ. 10,220.55 கோடி. இதில் இன்னும் கவனமாக பார்த்தால் பெட்ரோலிய பொருட் களின் விலை நிர்ணயிக்கும் உரிமை அரசின் கையில் இருந்த வரை அடைந்திருக்கும் லாபத்தை விட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்ய துவங்கிய பின்பு அடைந்திருக்கும் லாபம் அதிகம். 2010- 11 ன் இரண்டாம் காலாண்டில் மட்டும் ( 2010 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ) எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தை பார்ப்போம்.

[2010-2011]ஆண்டு நிகரலாபம் அரசுக்கு செலுத்திய வரி மொத்த லாபம்

(கோடியில்) 

ஐஒசி5294.00,832.27,6126.27                                                                                    எச்பிசிஎல்2142.22 ,90.90, 2233.12 

பிபிசிஎல் 2142.22 ,198.00 ,2340.22

உண்மை நிலை இவ்வாறிருக்க, எந்த அடிப்படையில் காங்கிரஸ், திமுக தலைமை யிலான ஆட்சியாளர்கள் எண்ணெய் நிறு வனங்களுக்கு நஷ்டம் என கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. அதாவது லாபத்தின் இலக்கில் சிறிய குறைவு ஏற்பட்டாலும் அதனை மத்திய அரசு அவர்களுக்கான நஷ்டமாக பார்க்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

ஏற்றுமதிக்கு எதற்காக வரி விலக்கு ?

2010- 11 ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரத்து 781 கோடி ரூபாய்க்கு பெட்ரோலிய பொருட் கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக் கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் தேவையில் 79 சதவிகிதம் இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இங்கிருந்து மற்ற நாடு களுக்கு எரி பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்?. இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் பணியை அரசு நிறுவனங்களே 74 சத விகிதம் செய்கிறது. மீதமுள்ள 26 சதவிகித சுத்திகரிப்பு பணியை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. அப்படி சுத்திகரிப்பு செய்யும் பெட் ரோலியப் பொருட்களை ரிலையன்ஸ் நிறு வனம் 59 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிலேயே பெட்ரோலிய பொருட் களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் போது ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும்? அதற்கும் கார ணம் இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்று மதிக்கு மத்திய அரசு பல்வேறு சுங்க வரி சலுகைகளை அளித்திருக்கிறது. அத னையும் ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனமே அமுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் “நல்லெண்ணமே” இதற்கு காரணம்.

இதனை கண்டறிந்த நாடாளுமன்ற நிலைக்குழு, “சர்வதேசச் சந்தையில் பெட் ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக் கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச்சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வரு மானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடை யும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலை யைக் குறைக்கப் பயன்படுத்தலாம்” எனப் பரிந்துரை செய்தது. ஆனால் மன்மோகன் அரசு, அதெல்லாம் முடியவே முடியாது என்று கூறிவிட்டது.

அதே நேரம் இதே மன்மோகன்சிங்,ஏழை கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கும், சமையல்எரிவாயுவிற்கும் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார். இதுதான் மன் மோகன் வகையறாவின் வர்க்கப்பாசம் என்பது.

இது மக்கள் நலனுக்கான அரசா? 
                                      
எப்போது பார்த்தாலும் விவசாயத் திற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண் டும். ரேசன் பொருட்களுக்கு அளிக்கும் மானி யத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சாரதிற்கு அளிக் கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என சாதராண மக்களுக்கு கிடைக்கும் ஒரு சில சலுகைகளையும் வெட்டுவதிலேயே மத்திய காங்கிரஸ் சொனியா,மன்மோகன் சிங் அரசு குறியாக இருந்து வருகிறது. 
          
ஆனால் மறுபுறம், நாட்டின் பெரும் முத லாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக் கும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. 2008 முதல் 2010 ம் ஆண்டு வரை பெரும் நிறுவனங்களிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டிய ரூ. 9 லட்சத்து 16 ஆயிரம் கோடி யை அப்படியே விட்டுவிட்டனர். உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கிறோம் என்று கூறி, 2008-09ஆம் ஆண்டில் 66 ஆயிரத்து 901 கோடி ரூபாயும், 2009-10ஆம் ஆண்டில் 79 ஆயிரத்து 554 கோடி ரூபாயும் நேரடி வரி களில் சலுகைகள் அளிக்கப்பட்டது. இதே போன்று மிக உயர்ந்த அளவில் வருமானவரி செலுத்துவோருக்கு, 37 ஆயிரத்து 570 கோடி ரூபாயும், 40 ஆயிரத்து 929 கோடி ரூபாயும் முறையே வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டி ருக்கிறது. இவ்வாறு இரண்டு ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சலுகை கள் அளித்திருக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் தாராளமயம், தனி யார்மயம், உலகமயம் என்ற பெயரில் ஏழை களை மேலும் ஏழைகளாக்குவது, பணக்காரர் களை மேலும் பணக்காரர் களாக்குவது என்று இந்திய சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வை மத்திய அரசே உருவாக்குவதேலட்சியாமாகக் கொண்டு சோனியா-ராகுல் காங்கிரசு செயல்பட்டு வருகிறது. ஆக, மத்திய ஆட்சியாளர்கள் பின்பற்றும் உலகமயக் கொள்கையையும் எதிர்த்து முறியடித்தால் மட்டுமே சாதாரண,நடுத்தர, உழைப்பாளி மக்கள் வாழ்ந்திட முடியும்.
                                                                                            நன்றி: தீக்கதிர்,

ஞாயிறு, 13 நவம்பர், 2011

நிலாப்பெண்ணுக்கு...: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

நிலாப்பெண்ணுக்கு...: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?: நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும்,...

வெள்ளி, 11 நவம்பர், 2011

News at Tamilsource,நிதிஷ்குமாரின் நிர்வாகத்தால் வளமாகிறது. வெளிமாநிலத்தில் இருக்கும் பீகார் மக்கள் திரும்ப வாய்ப்பு. - Thedipaar.com

News at Tamilsource,நிதிஷ்குமாரின் நிர்வாகத்தால் வளமாகிறது. வெளிமாநிலத்தில் இருக்கும் பீகார் மக்கள் திரும்ப வாய்ப்பு. - Thedipaar.com

நாஞ்சில் மனோ: இன்றைய நாட்டு நடப்பு....!!!

நாஞ்சில் மனோ: இன்றைய நாட்டு நடப்பு....!!!: இந்த அணுமின் நிலையம் குறித்து பலரும் பல தகவல்களை வெளியிட்டு வரும் இந்த சூழ்நிலையில், நாட்டு மக்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ள நமது மத...

நாஞ்சில் மனோ: வரலாறு முக்கியம் அமைச்சரே...!!!

நாஞ்சில் மனோ: வரலாறு முக்கியம் அமைச்சரே...!!!: இனி நூறு வருஷத்துக்கு அப்புறம்தான் 11/11/11 இந்த மாதிரி தேதி பார்க்க முடியும் அதாவது 11/11/2111 அன்றுதான் அடுத்த 11 வரப்போகுது, குழந்தை பெற ...

சனி, 5 நவம்பர், 2011

பத்து பேரில் ஒருத்தராவது கெட்டுப்போகாமல் இருக்க வே

தமிழகரசு பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் இலவசமாக லேப்டாப்(மடிக்கணினி)வழங்கி வருகிறது. மாணவர்கள் கையில் இருக்கும் மடிக்கணினிகள் கல்வி வளர்ச்சிக்காக மட்டுமே பயன்பட வேண்டும் என்பதே நம் கனவு, இந்தக்கனவு மெய்ப்பட்டால், மாணவர்களின் அறிவும்,படிப்பிலுள்ள ஈடுபாடும் மேலும் வளர மடிக்கணினிகள் காரணமாக இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. நாளை மடிக்கணினிகளால் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றார்கள், ஈடுபாட்டோடு படித்தார்கள் என்ற செய்தியைதான் நாம் கேள்விப்பட வேண்டும், ஆகவே பாதுகாப்பான மடிக்கணினிகளை வழங்கும் வரையிலும் அதைப்பற்றி வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.பத்து பேரில் ஒருத்தராவது கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமே என்ற நல்லெண்ணத்தில். இன்றைய மாணவர்கள் மிகவும் புத்திசாலிகள், அவர்களின் அறிவும், திறமையும் மேலும் வளர்ந்து நல்ல பாதையை வகுத்துக்கொள்ளவே தமிழக அரசு மடிக்கணினிகளை வழங்குகிறது. ஆனால் மிக மோசமான அதன் மறுபக்க விளைவுகளை பற்றி பலர் யோசிக்கவில்லை, இந்த பதிவு மக்களை யோசிக்க வைக்கவேண்டும் என்ற உந்துதலில் எழுதலானேன். மடிக்கணினி மூலம் பல விதங்களில் மாணவர்கள் தவறான வழிகளில் சென்று விட அதிக வாய்ப்புள்ளது.வருங்கால இந்தியா இளைஞர்களின் கையிலதான் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.இளைஞர்களை கெடுக்கும் முக்கிய ஆயுதங்களான போதைப்பொருட்கள்,ஆபாசம் இவ்விரண்டையும் முழுவதும் தடுக்க முடியாவிட்டாலும் ஓரளவாவது தடை செய்வதன் மூலம் ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும். தொலைக்காட்சி மூலம் ஆபாச நிகழ்ச்சிகளும் இணையத்தில் வாயிலாக ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிகையும் பத்து மடங்காக அதிகரித்துள்ளது மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரப்பூரவமான தகவல்கள் தெரிவிக்கின்றன்.இனி பள்ளி மாணவர்கள் கையிலும், கல்லூரி மாணவர்கள் கையிலும் மடிக்கணினி கிடைத்தால் எந்த அளவிற்கு மாணவர்களின் அறிவு வளருமோ அதே அளவிற்கு தவறு நடப்பதும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.உதாரணமாக நாம் கூகிள் தளத்தில் சென்று ஏதாவது ஒரு தமிழ் வார்த்தையை தட்டச்சு செய்தால் அது ஆபாச வார்த்தயை நமக்கு காட்டுகிறது அதைச் சொடுக்கி அவர்கள் தவறான தளத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகமதிகம் அதற்காக இண்டெர்நெட் வேண்டாம் என்றால் அது முட்டாள்தனமான முடிவாகதான் இருக்கமுடியும்.இதைத்தடுக்க அரசிடமாவது சொல்லி இலவசமாக கொடுக்கும் மடிக்கணினியில் சில மாற்றங்கள் செய்வதன் மூலமும் குற்றங்கள் செய்யக்கூடிய சுழ்நிலையை தவிர்ப்பதன் மூலமும் பெருமளவு குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும் மிக பாதுகாப்பான லேப்டாப்பினை மாணவர்களுக்கு தர வழி வகுக்கும். ஆபாச தளங்கள் எக்காரணத்தை கொண்டும் அரசு கொடுக்கும் லேப்டாப்பில் தெரியக்கூடாது. இதற்காக கணினியுடன் கூடிய ஆபாசதள தடுப்பு மென்பொருள் சேர்ந்தே அமைந்திருக்க் வேண்டும்.( Uninstall,Delete செய்ய முடியாத வண்ணமிருக்க வேண்டும்). சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் போன்ற வலைதளங்களை பயன்படுத்த முடியாத வண்ணமிருக்க வேண்டும். வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் அவ்வப்போது தானாகவே அப்டேட் செய்யும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும். Hacking Software, மற்றும் போலியான மென்பொருட்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய முடியாதபடி அமைந்திருக்க வேண்டும். கூகிள் தளம் இல்லை என்றால் இணையமே இல்லை என்று சொல்லும் நமக்கு சீனா ஒரு முன் உதாரணம் தான், அந்த நாட்டில் இளைஞர்கள் இணையதளம் மூலம் எந்த வழியிலும் தவறாக சென்று விடக்கூடாது என்பதற்காக ஆபாச தளங்களை காட்டியதற்காக கூகிள், யூடியுப், பேஸ்புக் போன்ற சமுகத்தை சிரழிக்கும் வலைத்தளங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவின் முக்கியத்துவம் பற்றி நம்மனைவருக்கும் தெரிந்திருக்கும்.அரசு கொடுக்க இருக்கும் இலவச மடிக்கணினிகளில் இங்கு குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு அம்சம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் தவறான வழிகளில் செல்வது பெருமளவு குறைக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப்பதிவு அரசின் கவனத்திற்கு செல்லுமா என்று தெரியவில்லை முடிந்த வரை இந்தப்பதிவை அரசு அதிகாரிகளிடமும் நம் சமுதாய நண்பர்களிடமும் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. ஒரு விபத்து நடந்து மக்களை காப்பாற்றுகிறவர்களை விட,விபத்தே நடக்காமல் பாதுகாக்கப்படவேண்டும் என்ற முன்னெச்சரிக்கை யோசனையை இங்கு வழங்கியிருக்கிறேன்,ஆபத்தை தேடி போகும் குழந்தைகளைப்பற்றி நாம் கூற வில்லை,பல மாணவர்கள் விபரம் தெரியாமல் சென்றுவிடக்கூடாதே என்பதற்காக தான். இது வெறுமனே படித்துவிட்டு,விட்டுவிட வேண்டிய பதிவல்ல, யாரோ செய்வார்கள், யாரோ பார்த்துக்கொள்வார்கள்,என்றில்லாமல் இத்தகவலை இளைய தலைமுறைகள் நலனில் அக்கறைக் கொண்ட நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.வருங்கால இந்தியாவின் நலன் கருதியும் நம் சமுக நலன் கருதியும் இப்பதிவை நம்மிடமுள்ள சமூக தளங்களிலும் வெளியிட்டு,அரசு அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்று அரசின் கதவுகளை தட்டுவதன் மூலம் இலவச லேப்டாப் கொடுக்கும் அரசு மிக பாதுகாப்போடு கூடிய லேப்டாப்பினை மாணவர்களுக்கு தர வழி வகை செய்யப்படவேண்டும். இப்போதைய மாணவர்கள் பல பல மடங்கு தொழில்நுட்ப துறையில் கரை கடந்தவர்கள். “திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற வரிகள் தான் இங்கும் உண்மையாகிறது… மேலும் இப்பதிவு அரசு இலவசமாக தரும் மடிக்கணனி(லேப்டாப்)க்கு மட்டுமன்று ஒவ்வொரு மாணவர்களுடைய பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் சொந்த செலவில் வாங்கி கொடுத்தாலும் இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.


SURYA
tks dinakaran.com