புதன், 4 செப்டம்பர், 2019

Happy teachers day

D.e.o வந்தார். அவரை பார்த்த H.m ஓடோடி சென்று வரவேற்றார். இதை பார்த்தவன் Deo தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில்Ceo வந்தார். இதை பார்த்த இருவரும் ஓடிச்சென்று அவரை வரவேற்றனர். அதனால்Ceoதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் Jd வந்தார். இதை பார்த்த மூவரும் ஓடிச்சென்று வரவேற்றனர். இதை பார்த்தவன் Jdதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் கல்விஅமைச்சர் வந்தார்.எல்லோரும் சென்று வரவேற்றனர். இதை பார்த்தவனுக்கு கல்விஅமைச்சர் தான் பெரியவர் என்று நினைத்தான். விழா முடிந்ததும் கல்விஅமைச்சர் பக்கத்தில் இருந்த ஒரு சந்தில் நடந்து சென்றார். கூடவே அவர் பின்னால் எல்லோரும் சென்றனர். அவர் அந்த சந்தின் இறுதியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே இருந்த ஒரு பழைய கட்டிலில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவரிடம் அமைச்சர்,''ஐயா! நான் முத்து வந்திருக்கிரேன்'' என்றார். அதற்கு அவர் ,''எந்த முத்து'' என்றார். ''ஐயா உங்கள் வகுப்பில் படித்த முத்து. நீங்க கூட அடிக்கடி குறும்புக்கார பயலே அப்படினு கூப்பிடுவிங்களே.. அந்த முத்து யா இப்போது அமைச்சராய் இருக்கிறேன்.'' என்று சொல்லிக்கொண்டே நெடுஞ்ஞாண் கிடையாக அவர் காலில் விழுந்தார். இதையேல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் 'ஆஹா!! இந்த உலகிலேயே ஆசிரியர்தான் உயர்ந்தவர். அதனால் நானும் நல்லா படித்து ஆசிரியராய் ஆவேன்'' என்று நினைத்துக்கொண்டானாம்.
Salute teachers🚶🏃🏃Happy teachers day

சனி, 31 ஆகஸ்ட், 2019

சோளகர் தொட்டி - ச.பாலமுருகன்


சோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்சோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்சோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்சோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்

வெ.நீலகண்டன்
படங்கள் : எம்.விஜயகுமார்
சோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்
சோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்
னங்களும் மலைகளும் கொண்டைஊசி வளைவுகளும் என நீள்கின்றன பாதைகள். சத்தியமங்கலத்தில் ஏறி, திம்மம் கடந்து, தாளவாடியைத் தொட்டு, இன்னும் இன்னுமென நீள்கிறது பயணம். ஹொய்சாலர்களின் யுத்தக் கேந்திரமான எரன்ஹல்லி கோட்டையில், பிரதான சாலையிலிருந்து விலகுகிறது சிறு பாதை. அந்தப் பாதையின் முடிவில் இருக்கிறது சோளகர் தொட்டி.  
சோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்
அந்தப் பகல் பொழுதிலும் குளிர்ச்சியை அள்ளி அப்புகிறது, வனத்திலிருந்து வருகிற காற்று. தொட்டி, அமைதியில் உறைந்திருக்கிறது. சுமார் 40 வீடுகள் இருக்கலாம். பெரும்பாலும் தொகுப்பு வீடுகள். அவற்றில் பல, கதவு பெயர்ந்து, சுவர் சாய்ந்து அபலையாக நிற்கின்றன. கோடு கிழித்ததுபோன்று இரண்டு தெருக்கள். மனிதர்களுக்கு இணையாக கால்நடைகளும் நிறைந்திருக்கின்றன. 

கிழக்கில் சிக்கரன்குட்டே, தெற்கில் வாரதகுட்டே, மேற்கில் சன்னகுட்டே, வடக்கில் உள்ளக்கன்குட்டே என நான்கு புறங்களிலும் வனம் அடர்ந்து சூழ்ந்திருக்கின்றன மலைகள். சிக்கரன்குட்டே மலையின் அடிவாரத்திலிருக்கிறது சீர்காடு.  தென்னையும், மாவும், வாழையும் முகிழ்ந்து நிற்கின்றன. எல்லாம், ஒருகாலத்தில் சோளகர்கள் வெட்டித் திருத்தியவை. இன்று, கீழ்நாட்டிலிருந்து வந்த எவரோ ஒருவர், மின்வேலி போட்டு ஆளுமை செய்கிறார். ஊருக்கு மேற்கு எல்லையில் இருக்கும் மணிராசன் கோயிலில் திருவிழாவுக்கான ஆயத்தங்கள் தொடங்கியிருக்கின்றன. 
சோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்


ச.பாலமுருகன் சித்திரித்த ‘சோளகர் தொட்டி’ நாவலின் நிலக்காட்சிகள் கண்முன்னால் விரிகின்றன. ‘வீரப்பன் தேடுதல் வேட்டை’ என்ற பெயரில், பழங்குடிகளின் பண்பாட்டையும் வாழ்க்கையையும் நிம்மதியையும் சூறையாடிய அதிரடிப்படையினரின் அத்துமீறல்களை மிதமான புனைவுகளோடு வெளியுலகுக்குக் கொண்டுவந்தது ‘சோளகர் தொட்டி’ நாவல். வெறும் செய்திகளாக, புலனாய்வுக் கட்டுரைகளாக மட்டுமே வெகுசமூகத்தால் கிரகிக்கப்பட்ட அந்த ரத்த சரித்திரத்தை, பண்பாட்டுக் கூறுகளடர்ந்த சமகால யதார்த்த நாவலாகப் படைத்தார் 
ச.பாலமுருகன். 

2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி வெளிவந்தது ‘சோளகர் தொட்டி’ நாவல். சிவண்ணா, பேதன், ஜோகம்மாள், கொத்தல்லி, கோல்காரன் சென்நெஞ்சா, சிக்குமாதா, ஒண்ணன், ஜடையன், மாதி, குல்லுமாதா, சித்தி, ரதி என சோளகர் தொட்டியில் உலவும் உண்மை மாந்தர்களே நாவலில் பாத்திரங்களாக உலவினார்கள். 14 ஆண்டுகள் கழித்து, மீண்டும் தொட்டிக்குச் சென்று அந்தப் பாத்திரங்களைச் சந்தித்து உரையாடினார் பாலமுருகன். 
சோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்
தொட்டி, நிறைய மாறியிருக்கிறது. நாவல்  உருக்கொண்ட காலத்தில் சிறுவர்களாக உலவியவர்கள், இளைஞர்களாகி விட்டார்கள். மிச்சமிருந்த சொற்ப நிலங்களையும் கீழ்நாட்டுக்காரர்கள் பறித்துக்கொள்ள, பெரும்பாலானோர் கூலிகளாக மாறிவிட்டார்கள். ஆயுள் தண்டனைக்குள்ளாயிருந்த, நாவலின் நாயகன் சித்தனும் (சிவண்ணா), சிறைத்தண்டனை பெற்றிருந்த அவர் மனைவி கும்பியும் விடுதலையாகி விட்டார்கள். அவ்வப்போது தொட்டிக்கு வந்து பார்வையால் எச்சரித்துவிட்டுச் செல்கிற காவல்துறை தவிர்த்து, பெரிதாக வேறெந்தச் சிக்கலும் இல்லை. 

லேசாக வெயிலின் நிறம் மங்குகிறது. கூலிக்குச் சென்ற தொட்டியினர் களைத்து உள்ளே நுழைகிறார்கள். பாலமுருகனைக் கண்டதும் அவர்களின் முகம் மலர்கிறது. தங்கள் கதையை எழுதிய நாவலாசிரியராக மட்டுமின்றி, தங்களுக்காகப் பாடுபட்ட ஒரு செயற்பாட்டாளராகவும் அவரைக் கொண்டாடுகிறார்கள். 

வெல்லம் போட்டு, கொதிக்கக் காய்ச்சிய ‘கறுப்புத்தண்ணி’ கொடுத்து உபசரிக்கிறார்கள். சிவண்ணாவாக நாவலில் வாழும் சித்தனுக்கு வயதாகிவிட்டது. சுற்றுவட்டாரத்தில் ‘துப்பாக்கி’ச் சித்தன் என்றால்தான் இவரை அடையாளம் தெரியும். போலீஸ் வைத்த பெயர். பின்னால் சிறு ஜடை தவழ, முண்டாசு அவர் தலையோடு ஒட்டியிருக்கிறது. பீடிக்கங்கும் புகையும் அணையவேயில்லை. நன்றியும் அன்பும் தளும்பத் தளும்ப எல்லோரையும் உபசரிக்கிறார். நெகிழ்வோடு சித்தனைத் தழுவிக்கொள்கிறார் பாலமுருகன். 
சோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்
“சோளகர் தொட்டி மாதிரி ஒரு நாவல் எழுதுவேன் என்று  நான் நினைக்கவேயில்லை. அந்த நாவல் உருக்கொண்ட காலத்தில், மிகப்பெரிய அவஸ்தையை அனுபவித்திருக் கிறேன்.  அந்த நாவலில் இருப்பது, இந்த ஒரு தொட்டியின் கதை மட்டுமல்ல... சோளகர் தொட்டி என்பது ஒரு குறியீடு.  கதைசொல்லலுக்கு தேர்வுசெய்த களம் அது. அவ்வளவுதான். பூர்விக நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு, அதிகார வர்க்கத்தால் வதைக்கப்படும் மொத்தப் பழங்குடிகளின் கதை அது. நாவலில் இடம்பெற்ற பாத்திரங்களும்கூட அப்படித்தான். சோளகர் தொட்டியைச் சேர்ந்த சிவண்ணா, நாவலில் ஒரு பிரதான பாத்திரம். ஆனால் நான் பார்த்த, திடகாத்திரமான, உணர்ச்சிமயமான பல ஆண்களின் கலவைதான் சிவண்ணா. சோளகர் தொட்டிக்குள் மட்டுமே இந்த நாவலைச் சுருக்க முடியாது. மிகப்பெரிய வெளி அதற்குள் இருக்கிறது...” பாலமுருகன் உணர்வுபூர்வமாகப் பேசுகிறார். 

சித்தன், அந்தத் தொட்டியிலேயே கொஞ்சம் உணர்ச்சிமயமானவர். சித்தனின் தாத்தா, சிக்கரன்குட்டே வனத்துக்குக் கீழே நான்கரை ஏக்கர் நிலத்தைச் செதுக்கி செழிப்பான பூமியாக்கினார். கீழ்நாட்டிலிருந்து வந்த ஒரு மனிதர், பேதனோடு நெருங்கிப் பழகி படிப்படியாக அந்த நிலத்தைப் பறித்துக்கொண்டு விரட்டிவிட்டார். பறிக்கப்பட்ட சீர்காட்டை மீட்கப் போராடினார் சித்தனின் அம்மா ஜோகம்மாள். அதுதான், அந்தத் தொட்டிக்கு நேர்ந்த துயரத்தின் தொடக்கம். இது சிறிய  புனைவுகளோடு காட்சியாகியிருக்கிறது நாவலில். 
சோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்
“இது என் காடு, இந்தச் சீர்காடு என் நிலம், என்னால இங்கிருக்கும் விலங்குக்கோ, பறவைகளுக்கோ எந்த பங்கமும் வந்ததில்ல. கீழ்நாட்டுக்காரர்கள் இங்க வந்து எங்களையும் எங்க நிலத்தையும், எங்க விலங்குகளையும் துன்புறுத்தினாங்க. நான் என் முன்னோர்கள் மாதிரி இல்ல. கேள்வி கேட்டேன், என்னை ஒழிக்க என்னென்னெவோ செஞ்சாங்க. போலீஸ், மணியக்காரர் எல்லாரும் அவங்களுக்கு ஆதரவு. துப்பாக்கி வெச்சிருந்தான், கட்டைக் கடத்தினான்னு என்னென்னவோ வழக்குகள் போட்டு சிறையில வெச்சாங்க. கடைசியா வீரப்பன் விவகாரம்... மாதேஸ்வரன் கோயில்ல பூசைபோடப் போனப்போ, என்னையும் தம்பியையும் புடிச்சுக்கிட்டுப்போய் ‘வீரப்பனுக்கு ரேஷன் குடுக்கிறீயாமே’னு கேட்டு அடிச்சாங்க. நான் அவரைப் பாத்ததுகூட இல்ல. ஆனா, எனக்குச் சட்டைக்கு அளவெடுத்துட்டாங்க. அளவெடுத்தாலே சாவு உறுதி. வீரப்பன் போடுற மாதிரி உடையைத் தச்சுப் போட்டு காட்டுக்குள்ள கொண்டுபோய் சுட்டுப் போட்டுருவாங்க. முடிக்கப்போறாங்கனு தெரிஞ்சதும், சிறைக்குள்ளயிருந்து தப்பி, மனைவியையும் கூட்டிக்கிட்டுக் காட்டுக்குள்ள ஓடிட்டேன். இது பேப்பர்ல வந்தவுடனே, வீரப்பன் பார்த்துட்டு என்னைத் தேடிவந்து ‘இனி என்கூடவே இரு’னு வச்சுக்கிட்டார். வேற வழியில்லை. ரெண்டு வருஷம் இருந்தேன். அந்தச் சூழலையும் ஏத்துக்க முடியல. அதனால, அவர்கிட்டயிருந்து தப்பிவந்து போலீஸ்ல சரணடைஞ்சேன்.” - விரக்தியாகச் சிரிக்கிறார் சித்தன். 
சோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்
சித்தனைச் சுற்றித்தான் ‘சோளகர் தொட்டி’ நாவலின் ஆன்மா உலவுகிறது. தொட்டிக்குத் தலைவர் ‘கொத்தல்லி’ எனப்படுவார். நாவல் எழுதப்பட்ட காலத்தில் இருந்த கொத்தல்லி, இறந்துவிட்டார். இப்போது இருப்பவர் புதிய கொத்தல்லி,  அவர்தான் இப்போது தொட்டிக்கு தலைவர். நாவலில் இடம்பெற்ற கோல்காரனும் இப்போது இல்லை. அவரது மகன் புதிய கோல்காரனாகியிருக்கிறார். சித்தனின் சகோதரி சித்தி, பாங்காட்டில் மாடு மேய்த்துவிட்டுத் திரும்புகிறார். முகத்தில் காலமும் காயமும் ஏற்படுத்திய தழும்புகளும் சுருக்கங்களும் நிறைந்திருக்கின்றன. உடைகளின் கிழிசல்களில் வறுமை ஒட்டியிருக்கிறது. மலர்ந்து சிரித்து பாலமுருகனை வரவேற்கிறார். 

‘சோளகர் தொட்டி’ எழுதிய காலக்கட்டத்தை மீட்டெடுக்கிறார் பாலமுருகன். 

“1993-ல் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாவட்டச் செயலாளராக இருந்தேன். அக்காலக்கட்டத்தில், ‘வீரப்பன் வேட்டை’ என்ற பெயரில் அப்பாவிகளைச் சித்ரவதை செய்யும் சம்பவங்கள் அதிகமாக நடந்தன.  ‘தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க’த்தைச் சேர்ந்த வி.பி.குணசேகரனும் தோழர்களும் அந்தப் பகுதிகளிலெல்லாம் அமைப்புகளைப் பலப்படுத்தி மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். மனித உரிமை செயற்பாட்டாளனாக நானும் அந்தப் பணியில் இணைந்தேன். நிறைய வேலைகள் செய்தோம். ஒருகட்டத்தில் இந்தப் பணிகளை ஓர் இயக்கமாகக் கட்டமைக்க வேண்டிய தேவை உருவானது. ‘மக்கள் சிவில் உரிமைக் கழகம்’, ‘பழங்குடி மக்கள் சங்கம்’, ‘பீப்புள்ஸ் வாட்ச்’, ‘சோக்கோ அறக்கட்டளை’, கர்நாடகத்தைச் சேர்ந்த  ‘சிக்ரம்’ போன்று ஒரே களத்தில் இயங்கிய அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்தோம். கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினோம். சோளகர் தொட்டிக்கும் பலமுறை வந்திருக்கிறேன்.

ஒரு பக்கம் வீரப்பனின் சாகசங்கள் பெரிதாகப் பேசப்பட்டன. இன்னொரு பக்கம் போலீஸார் நிகழ்த்திய சாவுகள் பேசப்பட்டன. இரண்டுக்கும் இடையில் வதைக்குள்ளான மக்களின் நிலை பற்றி யாரும் பேசவில்லை. ‘காட்டிக்கொடுத்தான்’ என்று வீரப்பன் ஒரு பக்கம் தலையை வெட்டுகிறான். இன்னொரு பக்கம், ‘வீரப்பனோடு தொடர்பில் இருந்தான்’ என்று கூறி போலீஸ் சுட்டுத்தள்ளுகிறது. காட்டுக்குள் இருந்த மக்களைப் பற்றியும் காட்டுக்கு வெளியே இருந்த மக்களைப் பற்றியும் பேசுவதற்கு ஆளே இல்லை. நாங்கள் அவர்களுக்காக நின்றோம்.

பல சட்டப் போராட்டங்கள் நடந்தன. மனித உரிமை ஆணையம், சதாசிவா கமிஷனை அமைத்தது. அந்த கமிஷனில் மக்கள் கொடுத்த வாக்குமூலங்கள் என்னை நிலைகுலையத் செய்தன. செயல்பாடுகளைக் கடந்து, மாபெரும் அழுத்தத்தை அந்த மக்களின் துயரம் உருவாக்கியது. அந்த உணர்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது. மிகப்பெரிய உளவியல் பாதிப்புக்கு உள்ளானேன். ஒரு செயற்பாட்டாளனாக அதைக் கடந்துபோக முடியவில்லை. இதை எப்படியாவது இறக்கிவைத்துவிட வேண்டும் என்று தவித்தேன். வடிகாலாகத்தான்  ‘சோளகர் தொட்டி’ நாவல் உருவானது.” 

பாலமுருகனின் வார்த்தைகளில் தொட்டியினர் தங்கள் பின்னோக்கிய வாழ்க்கையை நினைவுகளால் கடக்கிறார்கள். சித்தி, மாஸ்த்தியின் கண்கள் கலங்குகின்றன.  
சோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்
‘சோளகர் தொட்டி’ நாவலை வாஞ்சையாகப் புரட்டுகிறார் கும்பி. சிவண்ணாவின் மனைவி. பாலப்படுகை தொட்டியைச் சேர்ந்தவர். சிவண்ணாவின் மேலுள்ள காதலால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சோளகர் தொட்டிக்கு வந்தவர். எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன்புதான் விடுதலையாகியிருக்கிறார் கும்பி. சொந்த சீர்காடு பறிபோன பிறகு, அன்றாடக் கூலியாகிவிட்டார். சிவண்ணா இப்போது எந்த வேலைக்கும் போவதில்லை. கும்பியின் வருமானம்தான். காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை காட்டில் வேலை செய்தால் 150 ரூபாய் கூலி. 

நாவல் வெளிவந்த காலத்தில் மீனாவுக்கு 3 வயது. இப்போது முதுகலைப் பட்டப் படிப்பை முடித்துவிட்டார். தொட்டியின் முதல் முதுகலைப் பட்டதாரி. தன் உறவுக்காரப் பெண்களை சுற்றிலும் அமர வைத்துக்கொண்டு, நாவலில் வரும் சித்தன்-கும்பி இல்லறத்தில் இணையும் காட்சியை வாசிக்க, தொட்டியே கலகலக்கிறது. பள்ளிக்கூட வாசனையே இல்லாமலிருந்த தொட்டிக்குள், தொடக்கப் பள்ளி வந்துவிட்டது. வெண்ணிலா, சுந்தரி, ரோசா, ரேவதி, ஷோபா எல்லோரும் பட்டப் படிப்பைத் தொட்டுவிட்டார்கள்.  எல்லோருக்கும் தாங்கள் நிராதரவாக நின்ற காலங்கள் குறித்த தெளிவும் இருக்கிறது.

 வானம் அழுந்தக் கறுத்துவிட்டது. குளிர், உடம்புக்குள் நுழைந்து மென்முள்ளாய்க் குத்துகிறது. கொத்தல்லி கண்ணசைக்க, சாலைக்கு மத்தியில் உக்கடத் தீ ஏற்றப்படுகிறது. ஒண்ணான் மகன் தாசன், தப்பை, மத்தளத்தைத் தீயில் வாட்டி இசைக்க, சின்னக் கொத்தல்லி ஜவனன் பீனாச்சியை இசைக்கிறார். 20 ஆண்டுகால சோகமும் வலியும் அந்த நாதத்தில் இழையோடுகிறது. 

வெண்ணிலா, சுந்தரி, ரோசா, ரேவதி, ஷோபா, மீனா எல்லோரும் பாலமுருகணைச் சூழந்து அமர்ந்துகொண்டு அவரோடு உரையாடத் தொடங்கினார்கள்.

“கிராமம், கிராமமாகப் போய் பார்த்திருக்கிறீர்கள்... நாவலுக்கு சோளகர் தொட்டியை மட்டும் ஏன் தேர்வு செய்தீர்கள்..? போலீஸ்காரர்கள் செய்த கொடுமைகளை மட்டும் சொல்லாமல் தொட்டியின் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள், திருமண முறைகள் பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அதையெல்லாம் எப்படித் தெரிந்துகொண்டீர்கள்?”

“வெறுமனே போலீஸ் சித்ரவதைகளை மட்டுமே வைத்து ஒரு படைப்பை உருவாக்க முடியாது. உயிரோட்டமான படைப்புக்கு வேறு சில விஷயங்கள் தேவை. சோளகர் தொட்டியில் அதற்கான முடிச்சு எனக்குக் கிடைத்தது. பூர்விக நிலத்தை இழந்துவிட்டு நிர்கதியாக நிற்கும் மக்கள் இவர்கள். கீழ்நாட்டவர்கள் மேலே வந்து, இவர்களின் அச்சத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் பயன்படுத்தி வாழ்வாதாரமாக இருந்த நிலங்களைப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள். இது மிகப் பெரும் நீடித்த சோகமாக இருந்தது. படைப்புக்கான மையத்தை அங்கிருந்துதான் தொடங்க வேண்டும் என முடிவெடுத்தேன். 

நான் வாசித்த உலக இலக்கியங்களிலிருந்து பழங்குடிகளைப் பார்க்கும் முறையைத் தெரிந்துகொண்டேன். ஒரு கீழ்நாட்டானாக இருந்துகொண்டு நான் பழங்குடிகளின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியாது. நான் ஒரு பழங்குடியாக மாறவேண்டும். உணர்வுரீதியாக நான் மேற்கொண்ட சவாலான பயணம் அது. அதன்பிறகுதான் இப்படியொரு வடிவம் கைவந்தது. 

முன்முடிவுகளோடு ஒரு படைப்பை உருவாக்க முடியாது என்பது என் அனுபவம். நல்லதொரு படைப்பு, அதற்கு என்ன தேவையோ அதையே கேட்கும். அதைத் தேடியெடுத்துக் கொடுத்தால் போதும். சோளகர் தொட்டியிலும் நான் அதை எதிர்கொண்டேன். அதற்கு என்னவெல்லாம் தேவையாக இருந்ததோ, அதையெல்லாம் தேடியெடுத்துச் சேர்த்தேன். 

உலகத்தில் உள்ள பழங்குடி மக்கள் எல்லோருக்கும் பொதுமையான வாழ்க்கைமுறை இருக்கிறது. பழங்குடிகள் உலகம் முழுவதும் அப்புறப்படுத்தப் படுகிறார்கள். அதற்காகப் போராடும் மக்களை வெவ்வேறு வகைகளில் துன்புறுத்துகிறார்கள். இங்கே, வீரப்பன் ஒரு காரணி. வீரப்பன் இல்லாவிட்டாலும் நிலத்துக்காக இவர்கள் வேறு வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டிருப்பார்கள்.

சோளகர் தொட்டிக்கு முன்பு நான் நாவல் எழுதியதில்லை. அதற்கான கோட்பாடுகளும் எனக்குத் தெரியாது. அதைத் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. படைப்பாளி, தன் படைப்பை நேர்மையாக அணுகினால் போதும். அதுவே தன்னைத் தீர்மானித்துக்கொள்ளும். ஒரு நோக்கத்தை உருவாக்கி, அதன் போக்கில் படைப்பை உருவாக்க நினைத்தால், அதில் ஆன்மா இருக்காது. படைப்பின் நோக்கில்தான் அது பயணிக்க வேண்டும். 

சோளகர் தொட்டியில் எனக்கு ஒரேயோர் அரசியல் மட்டும் உறுதியாக இருந்தது. நாவலில் வீரப்பனுக்கு இடமில்லை. குறிப்பாக, நான் பழங்குடிகளுக்கான செயற்பாட்டாளன். அந்த அடிப்படையில் மக்களைப் பற்றி மட்டுமே நாவல் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நாவலில் வீரப்பனின் பாத்திரம் ஓர் ஓரத்தில் கடந்து செல்லும். அவ்வளவுதான். படைப்பும் வீரப்பனைக் கோரவில்லை. வீரப்பனைக்காட்டிலும் அவன் வாழ்ந்த காலமும், பயணித்த நிலப்பரப்புமே அவசியமாக இருந்தன.”

“எங்க தொட்டியில இல்லாத சில பாத்திரங்களும் இந்த நாவல்ல இருக்கே?”

“சோளகர் தொட்டி நாவலில் சில சித்திரிப்புகள் இருக்கின்றன. இது ஒரு நாவல். அதற்கேற்ப சில சித்திரங்கள் தேவை. சோளகர் தொட்டியின் நிலக்காட்சியேகூட, நான் பார்த்த பல கிராமங்களின் கலவையாகத்தான் இருக்கும். சோளகர் தொட்டியின் முகப்பில் இருக்கிற மரம், பர்கூரில் நான் பார்த்த வேறொரு தொட்டியில் இருந்தது. அதை நாவலில் பிடுங்கி நட்டேன். இது படைப்பாளியின் சுதந்திரம். பாத்திரங்களும் அப்படித்தான். வெவ்வேறு கிராமங்களில் நான் சந்தித்த மனிதர்கள் சோளகர் தொட்டிக்குள் குழுமியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாத்திரமும் ஒரு குறியீடு. புனைவுகளற்ற படைப்பு என்பது நாவல் வகைக்குள் வராது. சோளகர் தொட்டி மாதிரி நாவலில் இருக்கிற சிக்கல் அதுதான். இங்கு வாழ்கிற சித்தனை மட்டும் நான் சிவண்ணாவாக மாற்றினால், அந்தப் பாத்திரம் வளராது. நாவல் இழுக்கிற இழுப்புக்கெல்லாம் வராது.ஆனால், சோளகர் தொட்டிக்கான புனைவுகள் அனைத்தும் அந்தப் படைப்பின் ஆன்மாவைக் காயப்படுத்தாமல் உருவாக்கப்பட்டவை.” 

“எங்களைப் பற்றிய நாவலை எங்கள் மொழியில்தானே எழுத வேண்டும்?” 

“சோளகர் தொட்டி நாவலை ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்பேன் நான். உங்கள் மொழியிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட நாவல். என்னால் உங்கள் மொழியை உள்வாங்கி எழுத முடியாது. அப்படி எழுதுவது உங்களுக்குச் செய்யும் அநீதியாக முடிந்துவிடும். கொங்கு மண்ணைச் சேர்ந்த என்னிடமிருந்து கொங்குத் தமிழ்தான் வெளிப்படும். அதனால் நான் அந்த விபரீதத்துக்குள் இறங்கவில்லை.”

தொட்டியைச் சுற்றிலும் பீன்ஸ், தோசைக்காய் (தர்ப்பூசணி), தக்காளித் தோட்டங்கள் நிறைந்திருக்கின்றன.  ஜடையன் ஒரு தோசக்காயை அழகுற வெட்டி தட்டில் அடுக்கித் தருகிறார். 

“இந்தத் தோசைக்காய் விளைந்த காடும் என் பாட்டன் வெட்டித் திருத்தியதுதான். வீட்டுக்கு விருந்தினர் வந்தால், அவர்களை தோட்டத்துக்குள் விட்டு விருப்பப்பட்டதைச் சாப்பிடச் செய்வோம். இப்போது, அனுமதி வாங்கி ஓரிரு காய்களைப் பறித்துக்கொண்டு வரவேண்டியிருக்கிறது. எங்களைச் சுற்றிலும் மின்வேலி போட்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் வனத்தின் அடிவாரத்தில்கூட கால்வைக்க முடியாது போலிருக்கு” -விரக்தியான சிரிப்போடு பரிமாறுகிறார் ஜடையன்.
அந்தப் பொழுதில், மெள்ள எழுந்து சீர்காடு நோக்கி நடக்கிறார்கள் சித்தனும் பாலமுருகனும். சீர்காட்டில் இப்போது தென்னையும் வாழையும் நிறைந்திருக்கின்றன. தொட்டியின் எல்லையில் தொடங்கி, பாங்காட்டு வாயில் வரைக்கும் மின்வேலி போட்டு அடைத்துவைத்துவிட்டார்கள். நெடுநேரம் இருவரும் அந்தச் சீர்காட்டைப் பார்த்தபடி நிற்கிறார்கள். 

“தொட்டி, நிறைய மாறியிருக்கிறது. நிறைய பிள்ளைகள் படித்திருக்கிறார்கள். நான் பார்த்தபோது சிறுமிகளாக இருந்தவர்கள், இப்போது பட்டப்படிப்பை முடித்துவிட்டார்கள். தங்கள் சந்ததிக்கு நேர்ந்த துயரத்தை இந்தப் பிள்ளைகள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். அதற்கு சோளகர் தொட்டி ஊடகமாக இருந்திருக்கிறது. ஒரு நாவல், காலத்தின் ஆவணமாக மாறுவது நல்லது. சோளகர் தொட்டி அந்த இலக்கை அடைந்துவிட்டது. பழங்குடிகளுக்கு எதிரான வன்முறைகள் தொடரும் காலம் முழுவதும் இந்த நாவல் உயிர்ப்போடு இருக்கும்.”

தொட்டியினரின் அன்பு, ஒகு கொடிபோல நினைவைச் சூழ்ந்துகொள்கிறது. மனசுக்கு நெருக்கமாகிறார்கள் சோளகர் தொட்டியின் மாந்தர்கள். அவர்களின் புன்னகையில் நம்பிக்கையின் வெளிச்சம்... கனத்த நினைவுகளை நிரப்பிக்கொண்டு தொட்டியிலிருந்து இறங்குகிறது எங்கள் வாகனம்! 

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

மரண அறிவித்தல்.



 மரண அறிவித்தல்.

விகாரி ஆண்டு, ஆவணி மாதம், 2ம் தேதி திங்கள் கிழமை
19 August 2019.

திருமங்கலக்கோட்டை, சேர்ந்த காலம் சென்ற திரு.சுப்பிரமணியன்பிள்ளை மனைவியும்.

திரு.இராஜப்பாபிள்ளை, திரு.இராஜாபிள்ளை (பணிவரம்பன்) அவர்களின் தாயாருமான.

 திருமதி.மாரியம்மாள் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார். அம்மையாரின்ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

-
சவுதி வாழ் சகோதரர்கள்,
சூரியபிரகாஷ்,
வினோத்,
திருமங்கலக்கோட்டை.



புதன், 14 ஆகஸ்ட், 2019

பத்தாம் வகுப்பு வரலாறு பாடத்துக்குப் பின்

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!
18 வயதில் வீர மரணத்தை தழுவிய ஹேமு கலினி!
ஹேமு கலினி, தூக்கில் உயிரிழந்த போது, அவனுக்கு வயது 18. உடன் இருந்தவர்களின் பெயர்களைச் சொல்லியிருந்தால், ஹேமுவின் ஆயுட்காலம் பல பதினெட்டுகளைத் தாண்டியிருக்கலாம்; ஆனால், யாரையும் காட்டிக் கொடுக்க மறுத்ததால், பூமியிலிருந்து அவரை இழுத்துக் கொண்டது தூக்குக் கயிறு.
யாரிந்த ஹேமு கலினி? பாகிஸ்தான் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றால், உங்களின் சந்தேகம் இன்னும் ‘தீவிரமாகி’விடும். நம் தேசத்துக்கு எதிராக, ஏதோ சதி செய்தவர் என்று கற்பனைக் குதிரை பறக்க ஆரம்பித்து விடும். அவர் நம் தேச விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரன் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா?சுதந்திரப் போராட்டத்தின்போது, உடைபடாத இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சிந்து மாகாணத்தில் பிறந்த ஹேமு கலினி, ஆங்கிலேயர் வந்த ரயிலைக் கவிழ்க்க சதி செய்த போது, பிடிபட்டவர்; உடன் இருந்த விடுதலைப் போராளிகளைக் காட்டிக் கொடுக்க மறுத்ததற்கு, அவருக்குக் கிடைத்த மகத்தான பரிசு, வீர மரணம்.
உலகின் முதல் மனித வெடிகுண்டு – வீர மங்கை குயிலி!
நம் தேசம் கொண்டாட மறந்த, வரலாற்றால் மறைக்கப்பட்ட எத்தனையோ தலைவர்களில் இவரும் ஒருவர். ஆங்கிலேயரை அடித்துத் துரத்திய வேலு நாச்சியார் படையின் தளபதியாக செயல்பட்ட குயிலியின் கதையும், இளைய தலைமுறை அறியாதது. ஆங்கிலேயருக்காக உளவு பார்க்க வந்த வெற்றிவேல் என்பவரை குத்தி கொன்றார். உடலெல்லாம் சீமை எண்ணெயை ஊற்றிக் கொண்டு, தீ வைத்தபடி, ஆங்கிலேயரின் வெடி பொருள் கிடங்கிற்குள் குதித்து உயிரிழந்த குயிலிதான், உலக வரலாற்றின் முதல் தற்கொலைப்படை வீராங்கனை என்பது, ‘கூகுள்’ கூட கண்டறியாத சேதி. (பிறப்பு 03.01.1730 , மறைவு : 1790)
மகன்களின் தலையை வெட்டி தட்டில் கொடுத்த போதும் மண்டியிட மறுத்த மாவீரர்!
பகதூர் ஷா ஜாபர் முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர். சிப்பாய் கலகத்தை ஆதரித்த இவரை ஆங்கிலேயே அரசு மிக அதிகமாக தண்டித்தது. அவரது இரண்டு மகன்கள் மிர்சா முகல், மிர்சா கிசுர் சுல்தான் ஆகியோரின் தலைகளை துண்டித்து மேஜர் ஹட்சன் எனப்படும் ஆங்கிலேயே படைத் தளபதி பகதூர் ஷாவிடம் அவரது தர்பாரில் கொண்டு போய் கொடுத்தான். அழவில்லையே எனக் கேட்டபோது, “மன்னர்கள் அழப்பிறந்தவர்கள் அல்ல. ஆளப் பிறந்தவர்கள்!” என்று பதிலளித்தார் பகதூர் ஷா ஜாபர். வீரமும் அறிவில் முதிர்ச்சியும் கொண்ட இப்பேரரசர் பெரும் உருதுப் புலவரும் கூட. ஆங்கிலேயர் இவரை நாடு கடத்தி பர்மாவில் வைத்தனர்.
இறந்த பின்பு தனது இறுதி ஆசையாக தம்மை அடிமை மண்ணில் புதைக்கவேண்டாம் என்று பர்மாவிலேயே புதைத்துவிடவும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவர் மறைந்தவுடன் அவரது பர்மாவின் தலைநகர் ரங்கூனில் புதைத்தனர். இதுவன்றோ தேசப்பற்று!
அஸ்ஃபகுலா கான் – இந்திய தேசிய விடுதலைப் போரில் தூக்கிலிடப்பட்ட முதல் இஸ்லாமியர்!
உத்தர பிரதேச ஷாஜகான் பூரில் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அமைதியாக போராடினால் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்காது என்ற முடிவுடன் ஆரிய சமாஜத்தில் நண்பர்களுடன் இனைந்து 09.08.1925 அன்று கக்கோரியில் ரயிலில் பிரிடிஷ்ஷார் கொண்டு வந்த தொகையை சுதந்திர போராட்டத்திற்கு தேவையான ஆயுதங்கள் வாங்க கொள்ளையடித்தார். அதனால் 19.12.1927ல் தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடப்பட்ட முதல் இஸ்லாமிய சுதந்திர போராட்ட வீரர் இவர்.
தேசப்பற்றை ஊட்டும் விதத்தில் உருது மொழில் கவிதைகள் பல படைத்துள்ளார். இறப்பதற்கு முன்பு, “தாய் நாட்டிற்காக தூக்கிலடப்படும் முதல் இஸ்லாமியர் என்பதில் பெருமையடைகிறேன்” என்று சந்தோஷமாக வீர மரணத்தை தழுவிக்கொண்டார்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் முதன் முதலில் கைதான பெண் கமலாதேவி, புலித்தேவனின் தளபதி ஒண்டிவீரன், தேசியக்கொடியை வடிவமைத்த ஆந்திரத்துச் சகோதரர் பிங்களி வெங்கய்யா, ஆங்கிலேயர்களை எதிர்த்ததற்காக தனது இரு மகன்களின் தலைகளை தட்டிலே பார்த்தும் தலை வணங்க மறுத்த பகதூர்ஷா ஜபார், செண்பகராமன் பிள்ளை என, நமக்குத் தெரியாத சுதந்திரப் போராளிகளின் பட்டியல் வெகுநீளம்.
இந்த தன்னலம் கருதா தலைவர்கள், தங்களின் உடல், பொருள், ஆவிஅனைத்தையும் தியாகம் செய்து இந்த தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை நீத்திருக்கிறார்கள். நாம் நம் தாய் நாட்டிற்காக என்ன செய்யப்போகிறோம்?
இந்திய தேசிய விடுதலைப் போரில் இதுவரை கேள்விப்படாத பல பெயர்களை கேள்விப்பட்டோம். அவர்களின் புகைப்படத்தை பார்த்து பரவசமடைந்தோம். அவர்களின் வீர வரலாற்றை கண்டு திகைத்து நின்றோம். இந்த நாட்டுக்காக இதுவரை நாம் என்ன செய்துள்ளோம் என்பதை எண்ணி வெட்கி தலைகுனிந்தோம்.
பத்தாம் வகுப்பு வரலாறு பாடத்துக்குப் பின், நம் தேசத்துக்காக இன்னுயிர் தந்த தலைவர்களைப் பற்றி கற்றுக்கொடுப்பதற்கு நம் கல்வி முறை அனுமதிக்கவில்லை; அவர்களைப் பற்றி, நாம் அறிவு கொள்வதில், நம் அரசியல் தலைவர்களுக்கும் அக்கறையில்லை.
விளைவு… காந்தி, நேருவைத் தாண்டி, நம் தேசப்பற்று நீட்சி பெறுவதில்லை.
Image may contain: one or more people and outdoor

வியாழன், 27 ஜூன், 2019

வருந்த தக்க இரங்கல் செய்தி மரண அறிவிப்பு


வருந்த தக்க இரங்கல் செய்தி
மரண அறிவிப்பு
விகாரி ஆண்டு, ஆனி மாதம், 11ம் தேதி புதன்கிழமை
26 June 2019.
திருமங்கலக்கோட்டை, நேதாஜி தெருச் சேர்ந்த திரு.கணேஷ் அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார் இறைவனடி சேர்ந்தார் என
தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

அன்னாரை இழந்து துயரத்தில் தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

-சவுதி வாழ் சகோதரர்கள்,
கரம்பக்குடி - சூரியபிரகாஷ்,
திருமங்கலக்கோட்டை - வினோத்.

தொடர்புகளுக்கு

திருமங்கலக்கோட்டை
திரு. செல்வம்,










வருந்த தக்க இரங்கல் செய்தி
மரண அறிவிப்பு


அநுமாநல்லூர் , கிழக்குத் தெருவை சேர்ந்த Er.AKS.சண்முகத்தின் (Prop:சரணம் அய்யப்பா builders) தாயார் இயற்கை எய்தினார் இறைவனடி சேர்ந்தார் என தெரிவித்துக்கொள்வதுடன், தாயாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

தாயாரை இழந்து துயரத்தில் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

சவூதி அரேபியாவில் இருந்து,
கரம்பக்குடி – சூரியபிரகாஷ்.

தொடர்புகளுக்கு,
அநுமநல்லூர்,
Er.AKS.சண்முகத்தின்,
 (Prop:சரணம் அய்யப்பா builders),
+919789465465.



செவ்வாய், 29 ஜனவரி, 2019

அரசியல் கொலை

சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் கொலை நிகழ்த்தப்பட்ட தினம் இன்று.

ஒரு காலத்தில்

படித்தவன் என்றால் அவன் சட்டை பாக்கெட்டில் பேனா இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.
ஒரு காலத்தில் ஒட்டு மொத்த இந்தியாவிலேயே பேனா நிப்புகள் அதிகமாக தயாரிக்கப்பட்ட ஒரே ஊர்,சாத்தூர் தான்.பேனா நிப்புகளின் தலைநகரம் என்று கூட சாத்தூரைச் சொல்லலாம்.கிட்டத்தட்ட 100க்கும் மேல் நிப் கம்பெனிகள் குடிசைத் தொழில்கள் போல நடந்து கொண்டிருந்துள்ளது.
ஒரு பேனா நிப் தயாரிப்பதில் 15 பிராசஸ்கள் இருக்குமாம்.ஒரு சிறிய பத்துக்கு பத்து அறை இருந்தால் போதுமாம்.அங்கே உடனே ஒரு நிப் கம்பெனியைத் தொடங்கிவிடுவார்களாம்.
பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில்,சாத்தூரில் தயாரிக்கப்பட்ட நிப்புகளுக்கு இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் ஏக கிராக்கி இருந்துள்ளது.
பால்பாயிண்ட் பேனா வரவுகளால் பிற்காலத்தில் மை ஊற்றி எழுதும் பேனாக்களின் வாழ்வு கேள்விக்குறியாக அதோடு சேர்ந்து அவற்றின் இதயப் பொருளான நிப் தயாரிப்புத் தொழிலும் நலிவடைந்து இறுதியில் காணாமலே போய்விட்டது.
அதே போல ஒரு காலத்தில் வீட்டில் ரேடியோ இருந்தால் அது பெரும் கெளரவத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது.
அன்றைக்கு ரேடியோ இல்லாத வீடுகள் இல்லை.இன்றைக்கு ரேடியோ இருக்கும் வீடுகள் இல்லை.ரேடியோ காணாமல் போன போது போகுற போக்கில் டேப் ரிக்கார்டரையும் கூட்டிக் கொண்டு போய்விட்டது.
இது போல ஒரு காலத்தில் இந்தப் பொருட்கள் இருந்தால் மட்டுமே அது வீடு என்ற நிலையில் இருந்த பல பொருட்கள் இன்றைக்கு இல்லை.
அந்த வரிசையில் கூடிய சீக்கிரம் சேரப் போவது,
தொலைக்காட்சிப் பெட்டிகள்.
எல்இடி,எல்சிடி என டிவி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.இன்னும் பத்து வருடங்களுக்கு பின்னர் எந்த வீட்டிலும் டிவி இருக்காது.
வரும் பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து புதிய கேபிள் டிவி கட்டணம் எனும் பகல் கொள்ளை அமலுக்கு வருகிறது.அந்த கொள்ளையின்படி இதுவரையில் நீங்கள் கேபிளுக்கு மாதம் 100 ரூபாய்கள் கட்டியிருந்தால் இனி மாதம் 250 கட்ட வேண்டியதிருக்கும்.அதற்கு ஜிஎஸ்டி வேறு தனியாக வரும்.
அந்த கட்டணத்திற்கு ஜியோ இன்டர்நெட்டை இரண்டு மாதத்திற்கு ரீசார்ஜ் செய்து விடலாம்.அல்லது இரண்டு மாத நெட்பிளிக்ஸ் கட்டணத்தைக் கட்டிவிடலாம்...என்று மக்கள் யோசிக்கத் தொடங்குவார்கள்.அது தான் டிவியின் கடைசிக் காலத்தின் துவக்கப் புள்ளி.
1980 களில் பிறந்தவர்களோடு சேர்ந்து பிறந்தது தான் டிவிகள்.அது அந்த தலைமுறையின் கண் முன்னேயே காணாமல் போகப் போகிறது....