வெள்ளி, 24 மார்ச், 2023

fmb

FMB விளக்கம்:-
******************
நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை.
குறிப்பாக நிலவரைபடம்  #FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை 
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது.எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 
FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

 சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்:

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். 
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்:-
********************
1 சென்ட்      – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர்       – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர்       – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட்      – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ்    – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி           – 144 சதுர அடி
1 சென்ட்      – 3 குழி
3 மா              – 1 ஏக்க‍ர்
3 குழி           – 435.6 சதுர அடி
1 மா              – 100 குழி
1 ஏக்க‍ர்       – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 
40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்

நீட்டலளவை:

•   10 கோண் = 1 நுண்ணணு
•   10 நுண்ணணு = 1 அணு
•    8 அணு = 1 கதிர்த்துகள்
•    8 கதிர்த்துகள் = 1 துசும்பு
•    8 துசும்பு = 1 மயிர்நுனி
•    8 மயிர்நுனி = 1 நுண்மணல்
•    8 நுண்மணல் = 1 சிறு கடுகு
•    8 சிறு கடுகு = 1 எள்
•    8 எள் = 1 நெல்
•    8 நெல் = 1 விரல்
•    12 விரல் = 1 சாண்
•     2 சாண் = 1 முழம்
•    4 முழம் = 1 பாகம்
•    6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
•  4 காதம் = 1 யோசனை

வழியளவை:

•      8 தோரை(நெல்) = 1 விரல்
•     12 விரல் = 1 சாண்
•      2 சாண் = 1 முழம்
•     4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
•       2000 தண்டம் = 1 குரோசம்        21/4மைல்
•     4 குரோசம் = 1 யோசனை
•      71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு:

16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்:-

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்
1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்
1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்:-

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை:-

100 ச.மீ                              - 1 ஏர்ஸ்
100 ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர் 
1 ச.மீ                                  - 10 .764 ச அடி
2400 ச.அடி                       - 1 மனை 
24 மனை                         - 1 காணி
1 காணி                            - 1 .32 ஏக்கர் 
144 ச.அங்குலம்            - 1 சதுர அடி 
435 . 6 சதுர அடி          - 1 சென்ட் 
1000 ச லிங்க்ஸ்         -  1 சென்ட் 
100 சென்ட்                     - 1  ஏக்கர் 
1லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர் 
2 .47   ஏக்கர்                    - 1 ஹெக்டேர்
1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )
1 ஏக்கர்                             = 4840 குழி (Square Yard)
100 சென்ட்                     = 4840 சதுர குழிகள் 
1 சென்ட்                          = 48.4 சதுர குழிகள்
1 ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )
1 ஏக்கர்                             = 43560 சதுர அடி

செவ்வாய், 21 மார்ச், 2023

tamil

வாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…!

மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்??

கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்

4சுழி 5சுழி போட்டானாம்!

என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-

“தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்,

4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?

இது எப்படி இருக்கு?

தமிழ் எழுத்துகளில் -

ரெண்டு சுழி "ன" என்பதும் தவறு!

மூனுசுழி "ண" என்பதும் தவறு!

"ண" இதன் பெயர் "டண்ணகரம்",

"ன" இதன் பெயர் "றன்னகரம்" என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி 'ணகர' ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு"டண்ணகரம்" னு பேரு.

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி 'னகர'ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும்.
இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு.

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..

இதுல கூட பாருங்களேன்…
பிரியாத காதலர்கள் மாதிரி சேர்ந்து சேர்ந்தே வருவதை பாருங்களேன்! இது புரியாம இவைகளை நாம பிரிச்சுடக் கூடாதல்லவா…??

வேற மாதிரி சொன்னா

இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!

வர்க்க எழுத்து-ன்னா,

சேர்ந்து வர எழுத்து! அவ்ளோதான்.

இந்தப் பெயரோடு ("டண்ணகரம்" "றன்னகரம்") 
இந்த 'ண', 'ன' எழுத்துகளை அறிந்து கொண்டால்

எழுத்துப் பிழையும் குறையும்.

எப்படி???

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ட இருக்கா,

அப்ப இங்க மூனு சுழி 'ண' தான் வரும்.

ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல 'ற' இருக்கா

அப்ப இங்க ரெண்டு சுழி 'ன' தான் வரும்.

ஏன்னா அது "றன்னகரம்".

இதே மாதிரிதான் 
"ந' கரம்" என்பதை,"தந்நகரம்" னு சொல்லனும்.

ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து

வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. 
(பந்து, வெந்தயம், மந்தை…)

இது மாதிரி தெரிஞ்சிக்கணும் னு

நெனைக்கிறவங்க மட்டும்

தொடர்ந்து படிக்கலாம்.

(தெரிஞ்சவங்க பின்னூட்டத்த இட்டுட்டு 
அடுத்த பதிவை பார்க்கப் போகலாம்)

தமிழில் எந்த எழுத்தின் பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.

தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு.
இதைப் புரிந்துகொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும். (என்ன..? இதெல்லாம் பள்ளிக்கூட பாடத்தில் வராது!)

இது பற்றித்தான் இந்தப் பதிவு.
சரியா?

உதாரணமாக-

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன – 
எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!

இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.

உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்

இதை எல்லாரும் படித்திருப்போம்-

வல்லின எழுத்துகள் –
க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)

மெல்லின எழுத்துகள்–
ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)

இடையினஎழுத்துகள்–
ய ர ல வ ழ ள (இவை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்திலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்)
இதுவும் தெரிஞ்சதுதான்.

எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18எழுத்துகள் வந்துவிடும்.

கசடதபற ஙஞணநமன யரலவழள –
18எழுத்து வருதுல்ல..? இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப்படுத்தாமல் "கஙசஞடண" என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.

சொற்களில், மெல்லினத்தை அடுத்து

வல்லின எழுத்துகள் வரும்.

(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)

க ங – எங்கே – ங் க

ச ஞ – மஞ்சள் – ஞ் ச

ட ண – துண்டு – ண் ட

த ந - வந்தது – ந் த

ப ம – பம்பரம் – ம் ப

இடையின ஆறெழுத்தும் 
அவற்றின் பெயருக்கேற்ப 
(உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி 
மென்மையாகவும் இன்றி இடையினமாக) 
செருகப்பட்டு, கடைசியாக

ற ன – சென்றது – ன் ற

அவ்வளவு தாங்க...

உலகமே இரட்டை எதிர்த்துருவ 
ஈர்ப்பில் தானே இயங்குகிறது??!!

நெட்டை னா குட்டை

பள்ளம் னா மேடு

தொப்பை னா சப்பை

ஆணுன்னா பெண்.

வல்லினம் னா மெல்லினம்.

(

அதே அல்வாவோடு, கொஞ்சம் காராபூந்தி சேர்த்துக்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டையும் சாப்பிட்டு விடலாம்ல... அப்படித்தான்! வல்லினத்தை அடுத்து மெல்லினம் அமைக்கப்படுவது தமிழ் இயல்பு.

இதே மாதிரித்தான் -

சின்ன "ர" என்பதும் தவறு!

பெரிய "ற" என்பதும் தவறு!

ர - இதனை, இடையின 'ரகரம்' என்பதே சரியானது

- மரம், கரம், உரம்

ற - இதனை வல்லின 'றகரம்' என்பதுதான் சரி.

- மறம், அறம், முறம்

இதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்!
சிறிய என்னும் சொல்லில் பெரிய ற வருது!
பெரிய என்னும் சொல்லில் சிறிய ர வருது!

வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும்

இடையில வருவது இடையினம்.

இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.
சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.
என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும்
அது முயற்சிதான் !
இதே மாதிரித்தான்
உயிரெழுத்தில்
அ-ஆ
இ-ஈ
உ-ஊ
எ-ஏ
ஐ-
ஒ-ஓ - 
என வரும் இன எழுத்துகள்
கவிதை எழுதுவோர்க்கு இந்த எதுகை மோனை
(ஓசை ஒழுங்கு) அறிந்து
எழுத்துகளைப் போட்டால் கவிதை சுவைக்கும்,
படிப்பவர் நினைவில் நிலைக்கும்...KM MURUGAPPAN ADVOCATE PUDUKKOTTAI