சனி, 24 அக்டோபர், 2015

வாகனங்கள் நிறுத்துமிடம்
20 ஆண்டுகளில் இருசக்கரவாகனங்கள் வைத்திருக்கும் அனைவரும் வசதி மற்றும் தேவைக்கேற்ப நான்குசக்கர வாகனங்கள் வைத்திருக்கவேண்டிய நிலைவரும்.
ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குடியிருப்பு சாலைகள், குறுக்குதெருக்கள், முட்டுசந்துகள் இவைகளில் வாகனங்களை நிறுத்தமுடியுமா?
4 சக்கரவாகனங்கள் தயாரிக்கும் ஏகப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுமதியளித்துவிட்டு அவை உபயோகப்படுத்த தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவேண்டாமா?
நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தி அதன் கிளைச்சாலைகளை கவனிக்காமல்விட்டதால் போக்குவரத்து நெரிசல்
இனி ஆலயம், கடைத்தெரு, மண்டபங்கள் செல்கிறவர்கள் 4 சக்கர வாகனங்களை நிறுத்தவழியில்லாமல்போகும் நிலைமை ஏற்படும்
சென்னைநகரின் பலஇடங்களில் 4 சக்கரவாகனங்களை சாலையில்தான் நிற்கவைத்திருக்கிறார்கள்
அரசுக்கு சொந்தமான காலியிடங்களில் ப்ளாட்போட்டு விற்பதை நிறுத்தி அடுக்குமாடி அல்லது அன்டர்கிரவுன்ட் பார்க்கிங் வசதி ஏற்படுத்தலாம்
ஒருநகருக்கு சமூகநலக்கூடம், குடிநீர்தொட்டி, இடுகாடு எந்தளவுக்கு முக்கியமோ அதேபோல் வாகனநிறுத்துமிடமும் அவசியம்
இனி வீட்டுவசதிவாரிய குடியிருப்புகள் நிறுவும்போது பார்க்கிங் இடங்களையும் அருகே தேர்வுசெய்யவேண்டும்
சரியான திட்டமிடல் ஒரு நகரின் வளர்ச்சிக்கு முக்கியமாக அமையும்
மேல்தட்டுமக்களுக்கு மட்டுமே சொந்தமாகிக்கொண்டிருந்த கார் நடுத்தரவர்க்கத்தினரின்கனவுகளையும் நனவாக்குவது தவறில்லையே!!