புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இருந்து, ஓம் சக்தி ஐய்யப்பா CONSTRUCTION, Union Office அருகில் கறம்பக்குடி, 622302. e Mail – suryarajappa@gmail.com Er.சூரியபிரகாஷ்இராஜப்பாபிள்ளை.,B.Tech.,M.B.A., Cell # 944 31 55 107, 90 95 24 95 81. அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர் , கட்டிடம், மனை மதிப்பீட்டாளர். suryarajappa.blogspot.com / t witter - suryarajappa1 / Instagram& threads-surya.rajappa நினைவில் வாழும்.S.இராஜப்பா பிள்ளை. ஓம் சக்தி டைபிஸ்ட்.
ஞாயிறு, 29 மார்ச், 2026
வெள்ளி, 27 மார்ச், 2026
புதன், 18 மார்ச், 2026
சூரியாஇராஜப்பா: இறைவன் மனிதனுக்குச் சொன்னது: பகவத் கீதை மனிதன் இறை...
சூரியாஇராஜப்பா: இறைவன் மனிதனுக்குச் சொன்னது: பகவத் கீதை மனிதன் இறை...: இறைவன் மனிதனுக்குச் சொன்னது: பகவத் கீதை மனிதன் இறைவனுக்குச் சொன்னது: திருவாசகம் மனிதன் மனிதனுக்குச் சொன்னது: திருக்குறள் Facebook +5...
இறைவன் மனிதனுக்குச் சொன்னது: பகவத் கீதை மனிதன் இறைவனுக்குச் சொன்னது: திருவாசகம் மனிதன் மனிதனுக்குச் சொன்னது: திருக்குறள் Facebook Facebook +5
- இறைவன் மனிதனுக்குச் சொன்னது: பகவத் கீதை
- மனிதன் இறைவனுக்குச் சொன்னது: திருவாசகம்
- மனிதன் மனிதனுக்குச் சொன்னது: திருக்குறள்
விளக்கம்:
- பகவத் கீதை (இறைவன் மனிதனுக்கு): மகாபாரதப் போர்க்களத்தில், அர்ஜுனனுக்கு வழிகாட்ட பகவான் கிருஷ்ணர் உபதேசித்ததாகக் கருதப்படுவதால், இது இறைவனால் மனிதகுலத்திற்கு அருளப்பட்டதாகக் கருதப்படுகிறது.
- திருவாசகம் (மனிதன் இறைவனுக்கு): மாணிக்கவாசகர் இறைவனை நோக்கிப் பாடிய பக்திப் பாடல்களின் தொகுப்பு இது. இது ஒரு தனிமனிதன் (பக்தன்) தன் இறைவனிடம் வெளிப்படுத்தும் ஆத்மார்த்தமான அன்பையும், சரணாகதியையும் குறிக்கிறது.
- திருக்குறள் (மனிதன் மனிதனுக்கு): திருவள்ளுவர், சாதி, மதம், இனம் கடந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் வாழ்வியலில் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளை, மனிதர்களுக்குப் போதிக்கும் வகையில் எழுதியுள்ளார். எனவே இது 'மனிதன் மனிதனுக்கு அருளியது' என்று போற்றப்படுகிறது.
புதன், 11 மார்ச், 2026
தொழிற்சாலை
ஒரு காட்டில் பரம்பரை சொத்தில் உண்டு உறங்கி அலுத்துப்போன புலி ஒன்று ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்தது. அங்கே ஒரு எறும்பு குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தது. அதுபாட்டுக்கு தினம் வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டு, சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போய்விடும். புலியாருக்கு சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது.
எல்லாமே நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது. ஒரு நாள் நடு ராத்திரியில் கழிவறையில் அமர்ந்திருக்கும் போது திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோணிச்சு. இந்த எறும்பு தனியாவும் தன்னிச்சையாவும் வேலை செய்யுதே
அதை கண்காணிக்கிற அளவுக்கு நமக்கும் போதுமான நேரமும் இல்லையே (அதாவது அறிவு இல்லியே)... நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு நெனைச்சி ஒரு ஈயை பெரிய சம்பளம் கொடுத்து கொண்டு வந்தது.
அந்த ஈ வேலையில் ஒரு புலி போல பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி ( இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க ). அந்த ஈ சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு அதனால எனக்கு மட்டும் வேலை செய்ய ஒரு செக்ரட்ரி வேணும்னு கேட்டுச்சு. புலிக்கு ஏக சந்தோஷம் இந்த ஈ என்னமா யோசிக்குது.. நமக்கு இவ்வளவு நாளா இது தோனலையேன்னு ஒரு முயலை செக்ரட்டரியாக்குச்சு. அத்தோட புலியார் நமக்கும் கொஞ்சம் தெரியும்னு காட்டிக்க ,
"நீ கேட்ட மாதிரி PA போட்டாச்சு.. இனிமே எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து ரிப்போர்ட் வரைபடமாவும் அட்டவணையாவும் கொடுக்கனும்" என்று சொல்லுச்சு.
"ஓகே பாஸ் அதுக்கென்ன, பிரமாதமா செஞ்சிடலாம் அதுக்கு ஒரு கம்ப்யூட்டர், பிரிண்டர், புராஜக்டர் எல்லாம் வேணுமே"ன்னு சொன்னது, அப்படியே வாங்கியாச்சு.. ஒரு கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டும் பூனை ஒன்றின் தலைமையில் அமைச்சாச்சு. இப்போ ஏகப்பட்ட கெடுபிடி நெருக்கடிகளால் விரக்தியடைந்த அந்த எறும்போட வேலையில் ஒரு தொய்வு வந்துச்சு.
உற்பத்தி குறைஞ்சிடுச்சு.
புலி "எல்லாம் சரியா இருந்தும் ஏன் இப்படி ஆச்சி"ன்னு ஈய கேட்டுச்சி ... அதுக்கு ஈ
தன்னோட (அதாவது ஈயோட) ஐடியாக்களை எறும்புக்கு விளக்கமா எடுத்துச்சொல்ல ஒரு தொழில்நுட்ப ஆலோசகரை போடுங்கன்னு பாஸ் புலி கிட்ட சொல்லிச்சி. உடனே எறும்பை விட அதிக சம்பளத்தில் ஒரு குரங்குக்கு அந்த வேலையை புலி கொடுத்தது. ஏற்கனவே டல்லான எறும்பை இப்போது குரங்கும் அதன் பங்குக்கு குழப்ப.. அன்றய தினத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்க முடியாமல் போனது எறும்புக்கு. மேலும் உற்பத்தி குறைஞ்சி கம்பெனி நஷ்டத்தில் இயங்கியது.
'எத்தை தின்னா பித்தம் தெளியும்' என்ற மனநிலைக்கு ஆளான புலியார் நஷ்டத்தை சரி செய்ய என்ன செய்யலாம்னு ஆராய குரங்கை விட பெரிய சம்பளத்தில் ஒரு ஆந்தையை நியமிச்சது. ஆந்தை மூன்று மாத கடும் ஆராய்ச்சிக்கு பின் கடைசியா இப்படி சொன்னது. "தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமா ஆள் இருப்பதே காரணம் யாரையாவது வேலையை விட்டு எடுத்துட்டா நிலைமை ஓரளவு சீராகும்"
"யாரை எடுக்கலாம் அதையும் நீயே சொல்லிடு" என்றது புலி. "அதிலென்ன சந்தேகம் சரியாக வேலை செய்யாத அந்த எறும்பைதான்" என அதிரடியாக சொன்னது ஆந்தை.
இப்படித்தான் உலகெங்கும் அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் வேலை எதுவும் செய்யாமலே படம் காட்டுபவணும், ஜால்ரா அடிப்பவணும், திருட்டுத்தனம் செய்பவணும், வெறும் வாயால் வேலை செய்பவணும் பிழைத்துக் கொள்கிறான்.
வேறெதுவும் தெரியாமல் வேலையை மட்டுமே செய்பவன் பாதிப்புக்கு உள்ளாகிறான்.
வியாழன், 5 மார்ச், 2026
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026
வெள்ளி, 13 பிப்ரவரி, 2026
சனி, 31 ஜனவரி, 2026
செவ்வாய், 13 ஜனவரி, 2026
புதன், 7 ஜனவரி, 2026
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)