செவ்வாய், 8 டிசம்பர், 2015

தற்போது சென்னையில் தூய்மையான நீர் கிடைக்காவிடில்,ப்ரெஷர் குக்கரில் நீரை நிரப்புங்கள்.பிறகு 10-13 விசில் வரும் வரை சூடுபடுத்தவும். எந்த நீராக இருந்தாலும் சுத்திகரிக்கப்பட்ட நீராக மாறும். இது autovlave எனப்படும்.பாக்டீரியா,வைரஸ் இருந்தாலும் இறந்து விடும்.இந்த தவல் ஒரு scientist நண்பரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.இந்த சூழ்நிலையில் அடுத்த ஆபத்து கொசுக்கள். தேங்கியிருக்கும் தண்ணீரில் சமையல் எண்ணெய் ஒரு spoon அளவு ஊற்றினால் கொசுக்கள் உற்பத்தியாவது தடுக்கப்படும். தண்ணீர் சூழப்பட்டிருக்கும் அனைவரும் இந்த முறையை பயன்படுத்து கொள்ளலாம். பெரிய அளவு கற்பூரத்தை படுக்கைக்கு அருகில் கொசுக்கள் அருகில் வருவதை தடுக்கும்.
in chennai here is a solution if you dont have access to fresh water.. Take your pressure cooker and fill with water and wait for 10-13 whistles.. Any water will become sterile..this is called autoclave, any bacteria and virus would die. message from a scientist friend
The next big threat to Chennai will be the mosquitoes. A spoon of cooking oil in stagnated water will help kill the larvae before they develop. Got this tip from a good friend. Every one surrounded by water is requested to do so.. A little from everyone will help. Government action may be too late! please share as much as you can
Keep a piece of karpoor (not the synthetic tablets, but big pieces) near your bedside, this will prevent this mosquitoes come anywhere nearby. Can be kept in any place and this will prevent mosquitoes
‪#‎Raviudupa‬

புதன், 18 நவம்பர், 2015

Putin:

- அம்பேத்கர் (ஜலந்தர், பஞ்சாப், 1951)

நான் உங்களுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுத்துள்ளேன். நீங்கள்தான் அதை ஒழுங்காகப் பராமரிக்கவேண்டும். நான் ஒரு மரம் நட்டுள்ளேன். அதற்கு நீங்கள் நீருற்றி வளர்த்தால் அதன் நிழலும் உங்களுக்குக் கிடைக்கும். இல்லையேல் நீங்கள் வெயிலில் காயவேண்டியதுதான்.

ஒரிசாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்*****


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
மிகக் கடுமையான புயலை ஒடிஷா எதிர்கொள்ளலாம் என்றது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். இந்த முன்னெச்சரிக்கை வந்தவுடனேயே முதல்வர் நவீன் பட்நாயக் களத்தில் இறங்கிவிட்டார். வெள்ள அபாயப் பகுதிகளில் நீர்நிலைகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, வடிகால்களைச் சீரமைத்து, மேம்படுத்தும் பணி ஒருபுறம் முடுக்கிவிடப்பட்டது. மறுபுறம் பிரதமர் மன்மோகன் சிங் கவனத்துக்கு இதை எடுத்துச் சென்றார். முப்படைகளின் உதவியும் உறுதிசெய்யப்பட்டது. தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் கலந்து பேசி நெருக்கடிச் சூழலில் தகவல் தொடர்பைக் கையாளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தொடங்கி உள்ளூர் தண்டோரா வரை புயலின் பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை மக்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்புகளையும் அரசு துணை சேர்த்துக்கொண்டது. எந்தெந்த மாவட்டங்களில் புயல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதோ, அந்தப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணி புயலுக்கு மூன்று நாட்களுக்கு முன் தொடங்கியது. கிட்டத்தட்ட 11.5 லட்சம் பேர் வீடுகளைக் காலிசெய்து, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கூடவே அவர்கள் வீடுகளில் வளர்த்த கால்நடைகளும்.
சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய மக்கள் வெளியேற்றங்களில் ஒன்று இது. லட்சக்கணக்கில் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டன. மக்கள் பாதுகாப்பு மையங்களில் எல்லா மருந்துகளும் முன்கூட்டி இருப்பில் கொண்டுவந்து வைக்கப்பட்டன.
புயலுக்கு முந்தைய கடும் மழையிலேயே மோசமான பாதிப்புகள் தொடங்கிவிட்டன. மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் வீசிய பாய்லின் புயல் இன்னும் கொடூரமான பாதிப்புகளை உருவாக்கியது. கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 2.4 லட்சம் வீடுகள் நாசமாயின; ரூ. 3,000 கோடி பொருட்சேதம் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் 5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம் ஆயின. முன்னதாக, இதே போன்ற பெரும்புயலை 1999-ல் ஒடிஷா எதிர்கொண்டபோது 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 2 கோடிப் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், பாய்லின் புயலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 23 (அடுத்தடுத்த நாட்களில் இறந்தவர்களையும் சேர்த்தாலும் 50-க்குள்தான்).
ஒடிஷாவின் இந்தச் சாதனைக்கு எது அடிப்படை? பூஜ்ய உயிரிழப்பு இலக்கோடு இந்தப் பணியை மேற்கொண்டார் முதல்வர் நவீன் பட்நாயக். 1999 புயல் பாதிப்புகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடம். அதற்குப் பின் தொடர்ந்தும் பெருமழை, வறட்சி, வெள்ளம், புயல் என எல்லாப் பேரிடர்களையும் தொடர்ந்து எதிர்கொள்கிறது ஒடிஷா. ஆனால், மக்கள் துயரம் குறைந்திருக்கிறது. தேசிய அளவில் இன்றைக்குப் பேரிடர் மேலாண்மைக்கான முன்னுதாரணம் ஆகியிருக்கிறது ஒடிஷா பேரிடர் மேலாண்மை மையம்.
தமிழக நிலை
தமிழகம் இம்முறை இன்னும் புயல் தாக்குதலுக்கு ஆளாகவில்லை. அதற்குள் கடலூரில் மட்டும் 43 பிணங்கள் விழுந்திருக்கின்றன. 2004 சுனாமியின்போது தமிழகம் 7,996 பேரைப் பறிகொடுத்தபோதும், கடுமையாக விலை கொடுத்தது கடலூர். 2011 தானே புயலின்போதும் பெரும் விலை கொடுத்தது. இப்போதும் சீரழிகிறது. சரியாக, ஒரு மாதத்துக்கு முன் அக்.16 அன்றே இப்போதைய மழை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுவிட்டது வானிலை ஆராய்ச்சி மையம். நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன?
தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை முன்பே இதைச் சுட்டிக்காட்டியது: “இன்னொரு பேரிடர் நேர்ந்தால், அதை எதிர்கொள்ளும் தயார் நிலையில் தமிழகம் இல்லை.” பேரிடர்களை எதிர்கொள்வதற்கான அவசரக்கால நடவடிக்கை மையங்களில் 2012-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதை அம்பலப்படுத்தியது. “சுனாமியின்போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாகையில் ஒரு மையம்கூட இந்த ஆய்வின்போது செயல்படும் நிலையில் இல்லை; கடலூரில் 14 மையங்கள் செயல்படும் நிலையில் இல்லை” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது நிலைமையின் விபரீதத்தை விவரிக்கக் கூடியது.

ஹிட்லரின் சில உபதேசங்கள்…..


மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.
தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.
இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!
ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான். அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான்.
பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.
நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே!
நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.
நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.
உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தெரிவுசெய்தாள்.

திங்கள், 9 நவம்பர், 2015

அனைவருக்கும் எனது மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

புதன், 4 நவம்பர், 2015

கோவன் மனைவியின் ஆவேச கவிதை

பாஸ்கர் அந்தோணி முத்து
கோவன் மனைவியின் ஆவேச கவிதை
டாஸ்மாக்கை எதிர்த்து பாடல்களைப் பாடிய பாடகர் கோவன், தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி ஜெயலட்சுமி எழுதியுள்ள ஆவேச கவிதை:
குடி குடியைக் கெடுக்கும்…
பாட்டிலில் எழுதினால் தவறில்லை. ….
பாட்டில் எழுதினால் தேசதுரோகம்..
ஊற்றிக் கொடுத்ததை ஊருக்கே சொன்ன கேப்டனுடன் கூட்டணி….
வழிமொழிந்த கோவனுக்கு தடியடி…
இலக்கு வைத்து விற்கும் சாராய வியாபாரிக்கு அமைச்சர் பதவி. …
இதை எடுத்து சொன்ன தோழர் இப்போ சிறைக்கைதி….
ஏழு வயதில் இளநீர் விற்ற உனக்கு. ..
எழுவது வயதில் சாராயம் விற்க தெரியாதா என்ன….
தாலிக்கு தங்கம் ஒருபுறம்…
தாலி அறுக்கும் டாஸ்மாக் மறுபுறம். …
அடிபணியும் அமைச்சர் ஒருபுறம்…
அடித்து உதைக்க போலிஸ் மறுபுறம்…
மோடி வித்தை காட்டும் உனக்கு,
மோசடி செய்ய தெரியாதா என்ன. …
ஒன்று மட்டும் தெரியவில்லை உனக்கு…
அநீதிக்கு எதிராக போராடும் அனைவரின் பெயரும் கோவன் என்று….!

சனி, 24 அக்டோபர், 2015

வாகனங்கள் நிறுத்துமிடம்
20 ஆண்டுகளில் இருசக்கரவாகனங்கள் வைத்திருக்கும் அனைவரும் வசதி மற்றும் தேவைக்கேற்ப நான்குசக்கர வாகனங்கள் வைத்திருக்கவேண்டிய நிலைவரும்.
ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குடியிருப்பு சாலைகள், குறுக்குதெருக்கள், முட்டுசந்துகள் இவைகளில் வாகனங்களை நிறுத்தமுடியுமா?
4 சக்கரவாகனங்கள் தயாரிக்கும் ஏகப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுமதியளித்துவிட்டு அவை உபயோகப்படுத்த தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவேண்டாமா?
நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தி அதன் கிளைச்சாலைகளை கவனிக்காமல்விட்டதால் போக்குவரத்து நெரிசல்
இனி ஆலயம், கடைத்தெரு, மண்டபங்கள் செல்கிறவர்கள் 4 சக்கர வாகனங்களை நிறுத்தவழியில்லாமல்போகும் நிலைமை ஏற்படும்
சென்னைநகரின் பலஇடங்களில் 4 சக்கரவாகனங்களை சாலையில்தான் நிற்கவைத்திருக்கிறார்கள்
அரசுக்கு சொந்தமான காலியிடங்களில் ப்ளாட்போட்டு விற்பதை நிறுத்தி அடுக்குமாடி அல்லது அன்டர்கிரவுன்ட் பார்க்கிங் வசதி ஏற்படுத்தலாம்
ஒருநகருக்கு சமூகநலக்கூடம், குடிநீர்தொட்டி, இடுகாடு எந்தளவுக்கு முக்கியமோ அதேபோல் வாகனநிறுத்துமிடமும் அவசியம்
இனி வீட்டுவசதிவாரிய குடியிருப்புகள் நிறுவும்போது பார்க்கிங் இடங்களையும் அருகே தேர்வுசெய்யவேண்டும்
சரியான திட்டமிடல் ஒரு நகரின் வளர்ச்சிக்கு முக்கியமாக அமையும்
மேல்தட்டுமக்களுக்கு மட்டுமே சொந்தமாகிக்கொண்டிருந்த கார் நடுத்தரவர்க்கத்தினரின்கனவுகளையும் நனவாக்குவது தவறில்லையே!!

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

வெற்றி.SUCCESS

After a very long journey - SUCCESS SUCCESS SUCCESS

மிக நீண்ட பயணத்திற்கு பிறகு வெற்றி.

வெற்றியினால் உண்டாகும் சந்தோஷம்.

புதன், 17 ஜூன், 2015

ரமலான் நோன்பு வாழ்த்துக்கள் !!!

ரமலான் நோன்பு தொடங்கும் அனைத்து சகோதரர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் !!!

திங்கள், 13 ஏப்ரல், 2015

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்




தமிழ் புத்தாண்டு வரலாறு












































 
***********************


இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

செவ்வாய், 24 மார்ச், 2015

அம்மா பட்ஜெட்டா எப்பா பட்ஜெட்டா


தமிழக பட்ஜெட் தாக்கல் : தமிழகத்தில் 60,000 பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி நிதி வழங்கப்பட உள்ளது.

அதுவது

1,26,00,00,00,000
-----------------------
60,000

= 21,00,000

ஒரு விடுக்கு இருபத்தி ஒரு லட்சம்

எப்பா ........................