செவ்வாய், 27 அக்டோபர், 2020

ஐயா.வ.உ.சிதம்பரம்_பிள்ளை







தமிழர்_தலைமைகள்
`வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே, தமிழர்கள் மீண்டும் கடல்மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்' என அவர் ஆரம்பித்த சுதேசிக்கப்பல் நிறுவனம்தான் அவரை முன்னும் பின்னும் இரண்டு பீரங்கிகள் சகிதமாக நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட காராணமாகியது.
வெள்ளைக்கார சிறை அலுவலர்கள் செக்கின் நுகத்தடியைச் சங்கிலியால் பிணைத்து சங்கிலியை இடுப்பிலே இறுகக் கட்டி அதைக் கைகளிலே பூட்டி மாடு போல் செக்கை இழுக்க வைத்தார்கள். இது அவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் அவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதாலும் மக்களின் தொடர் எதிர்ப்பாலும் மேல்முறையீட்டின் காரணமாகவும் ஆறாண்டுகளில் விடுதலையானார்.
செல்வச்செழிப்பில் பிறந்து வாழ்ந்தவர் ஏழை எளிய மக்களுக்காகவும் தேசத்திற்காகவும் தம் வழக்கறிஞர் பட்டம் முதற்கொண்டு அனைத்தையும் இழந்து பல்வேறு ஊர்களில் வறுமை நீங்காமலே வாழ்ந்து இறக்கிற பொழுது மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய உயிர் துறந்த #ஐயா_வ_உ_சிதம்பரம்_பிள்ளை அவர்களின் நினைவு நாள் இன்று (18/11/1936)

life

 When you think your life is going bad, Google about
Kashmir, Yemen, Syria, Burma, and Palestine.

Uploading: 860860 of 860860 bytes uploaded.

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

கணக்கு

ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு வழிப் போக்கர்கள் அமர்ந்து இருந்தனர் .

இரவு நேரம்…, பெருத்த மழை வேறு , 

அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். 

வந்தவர் . நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். 

அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? 

என்றார் வந்தவர்.

இருவரில் முன்னவர் சொன்னார், 

என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். 

இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர், 

ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள், 

இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.

 மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார். 

( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை, 

ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். 

இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! 

நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். 

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்…

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்...

பொழுது விடிந்தது, மழையும் நின்றது. 

மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி, 
 
என்று சொல்லி *எட்டு தங்க நாணயங்களை கொடுத்து*, 

நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள், 

என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவர், 

அந்த காசுகளை சமமாகப்பிரித்து, 

ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார்*.
மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை*
மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.

ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(3:5)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை, 

என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும், 

நான் பங்கிட சம்மதித்தேன்…

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. 

அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது, 

என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் அரச சபைக்கு சென்றது*. 

அரசனுக்கு யார் சொல்வது சரி, என்று புரியவில்லை. 

நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்கு சென்றான். 

மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை. 

வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது…

மன்னருக்கு, கனவில் கடவுள் காட்சி அளித்து*, 

தீர்ப்பும்,விளக்கமும் தந்தார். கடவுள் சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் சபை கூடியது. 

மன்னர் இருவரையும் அழைத்தார்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவருக்கு ஒரு காசும்*, 

ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்*.

ஒரு காசு வழங்கப்பட்டவர், "மன்னா...!  இது அநியாயம்*. 

அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொன்டார்" என்றார்*

அரசர் சொன்னார். நீ உன்னிடம் இருந்த மூன்று ரொட்டிகளை ஒன்பது ரொட்டித் துண்டுகளாக்கி கொடுத்தாய்*. 

அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது*. 

அவன் கையில் இருந்த ஐந்து ரொட்டிகளை பதினைந்து ரொட்டித் துண்டுகளாக்கி கொடுத்தான்*. 

அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது*. 

ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி*. 

அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள்*. 

*ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்(1:7) என்றார்*..

ஆம் ! கடவுளின் கணக்கு இப்படி துல்லியமாகதான் இருக்கும்*…

நீங்கள் இழந்ததை எல்லாம் தருவது அல்ல, அவன் கணக்கு...

*எது உங்களுக்கு தகுதியானதோ அதுதான் உங்களுக்கு*. 

இது கடவுளின் ஏட்டு கணக்கு இல்லை*...

நாம் செய்யும் செயலில் இறைவன் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள்*
முழுமையாக தன்னை சேவைக்கு அர்பணித்துக் கொண்டவர்களை இறைவன் அறிவான்.

 Amudhan maheshvarma .