செவ்வாய், 27 அக்டோபர், 2020

ஐயா.வ.உ.சிதம்பரம்_பிள்ளை







தமிழர்_தலைமைகள்
`வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே, தமிழர்கள் மீண்டும் கடல்மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்' என அவர் ஆரம்பித்த சுதேசிக்கப்பல் நிறுவனம்தான் அவரை முன்னும் பின்னும் இரண்டு பீரங்கிகள் சகிதமாக நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட காராணமாகியது.
வெள்ளைக்கார சிறை அலுவலர்கள் செக்கின் நுகத்தடியைச் சங்கிலியால் பிணைத்து சங்கிலியை இடுப்பிலே இறுகக் கட்டி அதைக் கைகளிலே பூட்டி மாடு போல் செக்கை இழுக்க வைத்தார்கள். இது அவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் அவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதாலும் மக்களின் தொடர் எதிர்ப்பாலும் மேல்முறையீட்டின் காரணமாகவும் ஆறாண்டுகளில் விடுதலையானார்.
செல்வச்செழிப்பில் பிறந்து வாழ்ந்தவர் ஏழை எளிய மக்களுக்காகவும் தேசத்திற்காகவும் தம் வழக்கறிஞர் பட்டம் முதற்கொண்டு அனைத்தையும் இழந்து பல்வேறு ஊர்களில் வறுமை நீங்காமலே வாழ்ந்து இறக்கிற பொழுது மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய உயிர் துறந்த #ஐயா_வ_உ_சிதம்பரம்_பிள்ளை அவர்களின் நினைவு நாள் இன்று (18/11/1936)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக