கரோனா பயம் கொஞ்சம் மங்கிக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில் லைட்டாக ஒரு விஷயம். லைட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்.
வெளியூர் ஒன்றில் நண்பரின் நண்பருக்கு கரோனா முத்தமிட்டு இருக்கிறது. அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்து விட்டார். அன்று இரவு உணவுக்கு கேட்டிருக்கிறார்.
இன்னிக்கி ஃபுட் இல்லீங்க என்று சொல்லியிருக்கிறார்கள்.
நான் பணம் தரேன். யாராச்சும் போய் வாங்கி வர முடியுமா என்று கேட்டிருக்கிறார்.
"இல்லீங்க ஆள் இல்ல "
"வாங்கிட்டு வர்ரவங்களுக்கும் பணம் குடுக்கறேங்க "
"பணம் பிரச்சனை இல்லீங்க. ஆள் இல்ல. உங்க உறவுக்காரங்க யாரையாச்சும் வாங்கிட்டு வரச் சொல்லுங்க "
"இல்லீங்க , இது சொந்த ஊரு இல்ல. நான் பேச்சிலர். ஃபிரண்ட்ஸும் யாரும் ஊர்ல இல்ல "
"அப்டியா ...சரி ..15 நிமிஷம் டைம் தரோம். அதுக்குள்ள நீங்களே போய் வாங்கிட்டு வந்துடணும்...சரியா ?"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக