வியாழன், 21 டிசம்பர், 2023

300வது பதிவு

                      300வது பதிவு

                          21 மார்ச் 2011 தொடங்கிய இந்த எழுத்துப் பயணம், இன்று 21 டிசம்பர் 2023ல், 12 வருடங்கள், 8 மாதங்கள்=152 மாதங்கள்=4660 நாட்கள் கடந்தும் இன்றும் என்றென்றும், கண்டிப்பா கொஞ்சம் லாங் டைம் தான் இது. இருந்தாலு எடுத்தாச்சு. இந்த இடைவெளியில எனது 300 வது பதிவை பதிவிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

          இந்த இடைவெளியில, வாழ்க்கையிலையும் சரி, வேலையையும் சரி நிறைய ஏற்றத்தாழ்வுகள், நிறைய மாற்றங்கள், நன் மதிப்புகள் மற்றும் சொல்ல கஷ்டமா இருந்தாலும் கொஞ்சம், இல்ல இல்ல நரயாவே ஏமாற்றங்கள், இறக்கங்கள் மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் இல்லாம இருக்கு. இந்த இடைவெளியில, பல பல புதிய வாசகர்கள், வாடிக்கையாளர்கள்,  நண்பர்கள், உடன் பணிபுரிஞ்சவங்க, என் வாழ்க்கை உயர்வில் அக்கறை கொண்ட நல்லுள்ளம் படைத்தவர்கள் மற்றும் பொதுமக்கள சந்தித்சி இருக்கிறேன், பல நல்லா பழகிய வாசகர்கள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிஞ்சவங்க, என் வாழ்க்கை உயர்வில் அக்கறை கொண்ட நல்லுள்ளம் படைத்தவர்கள் மற்றும் பொதுமக்கள கால  இடைவெளி காரணமா தொடர்பு இல்லாம இழந்திருக்கேன். 

     ஆயிரம் பதிவுக்கு மேலே எழுதின நிறைய bloggerகள் (வலைப்பதிவர்கள்) இப்போ vloggerகள் (விடியோ வலைப்பதிவர்கள்) மாறிட்டாங்க இது காலத்தின் கட்டாயம் தொழில்நுட்ப வளர்ச்சி  இத கண்டிப்பா நம்ம ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.

 

 இவை அனைத்தையும் கடந்து

“மாற்றங்கள் மட்டுமே மாறாதவை”

 அப்படிங்கிற உலகமயமான தத்துவத்தின் அடிப்படையில்

 

இனிமே சீரான இடைவெளியில், தினசரிபட்டி பதிவுகளிட முயற்சி செய்றேன். வாசகர்கள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிஞ்சவங்க, என் வாழ்க்கை உயர்வில் அக்கறை கொண்ட நல்லுள்ளம் படைத்தவர்கள் மற்றும் பொதுமக்களின் ஆகிய அனைவரின் எகோபித்த உங்களின் அன்பு, அரவணைப்பு, ஆதரவு  என்றென்றும் எனக்கு தேவை.

 

நன்றியுரை;

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்

குறள் 108:

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

 என்னும் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு இணங்க,

     என்னுடைய வாசகர்கள், வாடிக்கையாளர்கள், பால்ய, பதின் வயது, பள்ளி, கல்லூரி, இந்திய, சவுதி அரேபிய அலுவலக, இணையதள நண்பர்கள், உற்றார்கள், உறவினர்கள், என் வாழ்க்கை உயர்வில் அக்கறை கொண்ட நல்லுள்ளம் படைத்தவர்கள் மற்றும் பொதுமக்களின் ஆகிய அனைவர்களுக்கும், மற்றும்

 அருமை தவப்புதல்வன் மாஸ்டர்.S.S.ஸ்ரீ ஐயப்பா சூரியபிரகாஷ்., வாழ்கைதுணைவியார் திருமதி.C.செல்வி சூரியபிரகாஷ்.,M.Com.,                       அன்னை மா.கலைசெல்வி., மாவட்ட செயலாளர் கரூர் (ஓய்வு), &

மண்ணுலகில் தாங்கள் மறைந்து இருந்தாலும். என்றென்றும் எங்கள் அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அப்பா காலஞ்சென்று நினைவில் வாழும்.S.இராஜப்பா பிள்ளை.

மேற்குரிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

 என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கி  எனது தாய்,  தந்தையின் பாத கமலங்களில் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்

 தொழில் முறை களப்பணி மற்றும் எழுத்துப் பணி இருப்பதால் தங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

 

இப்படிக்கு;

 மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்த்துங்கள் வளர்கிறேன், உங்களின் வாழ்த்துக்களில் வளர்கிறேன்.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்னும் அறவழியில்,
மக்கள் சேவையில் என்றென்றும்,

Er.சூரியபிரகாஷ் இராஜப்பா பிள்ளை.,

B.Tech., M.B.A.,      

ஓம் சக்தி ஐய்யப்பா CONSTRUCTION,

Union Office அருகில் கறம்பக்குடி, 622302.

Cell # +91 944 31 55 107,    +91 90 95 24 95 81.

suryarajappa@gmail.com

நன்றி.வணக்கம்.





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக